Elavarasan Annamalai
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக!

நமது வடலூர் வள்ளலாரை விட ஜீவகாருண்யத்தை திரம்பட வலியுரித்தியவர்கள் எவரேனும் உண்டா என்ற கேள்வி வந்தால் இல்லை என்றுதான்
சொல்வேன். அதர்க்கு உதாரணமாக .....

ஓர் உயிரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்து தின்று முடித்தாலும் அவன் தீயவன் அல்லன்.பாவியும் அல்லன்.கொடியனும் அல்லன்.கொலைகாரனும் அல்லன். அவன் நெற்றியில்தான் இருக்கிறதே திருநீறு.

அதிலேதான் தெரிகிறதே அவன் வரலாறு.பிறகென்ன தகராறு..?

அவனே நான் வணங்கும் தெய்வம்!- என்று நெடுஞ்சாண் கிடையாய் விழுகிறார் திருநாவுக்கரசர்.
திகைப்புத் தீயில் எரிந்து சாம்பலாகின்றன நம் சிந்தனைத் திசுக்கள்!

கருகல் வாசனையைச் சகித்துக் கொள்ளமுடியாமல் சன்மார்க்க உள்ளம் வள்ளலாரை ஏறிட்டுப் பார்க்கிறது.

நமது வடலூர் எம்பெருமான் ஒரு வெள்ளைச் சிரிப்போடு திருவருட்பாவைத் திறக்கிறார்.

* ஓர் ஆண்மகனைப் பெண்ணாக மாற்றி... ஒரே கணத்தில் மறுபடியும் அவளை ஆணாக மாற்றிக் காட்டினும் சரி...இறந்தவரை உயிரூட்டி எழுப்புவித்து அடுத்தடுத்து அதிசயமூட்டும்
அற்புத மந்திர வித்தைகளைச் சர்வசாதாரணமாக அரங்கேற்றும் சித்திகள் எல்லாம் சிறப்புற பெற்று வணக்கத்துக்குரியவனாய் ஓங்கி
உயர்ந்திருந்தாலும் சரி...

ஓர் உயிரைக் கொன்று தின்னவேண்டும் என்னும் மலிவான மனக்கருத்தை உடையவனாக ஒருவன் இருந்தால்...அவனை நான் ஞானியென்று ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

அவ்வாறு அவனை ஒருபோதும் அழைக்கக் கூடாது! இது என் குருவின் மேல் ஆணை. சிவன்மேல் ஆணை என்று மலையினும் மாணப் பெரிய உறுதியோடு அருதியிட்டு திறம்பட சொல்லும் ஆற்றல் நமது வடலூர் வள்ளலாரை தவிர வேறுவொருவராலும் இயலாது

என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய. அன்பன்.அ.இளவரசன்
ஜமின் பல்லாவரம்
சென்னை 117