Daeiou Vallalar anbargal
வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய சுத்த சன்மார்க்கம்:

வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய சுத்த சன்மார்க்கம்:
1 .செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க.
2 .கருணையே சிவம் என கொள்க.
3 .ஒன்று என காணும் உணர்ச்சி பெறுக.
4 .சத்திய நிலைதனை தயவினில் காண்க.
5 .தயவை கொண்டு தயவை பெறுக.
6 . ஒருமையால் தயவும்,தயவால் ஒருமையும் பெறுக.
7 ஏறா நிலைமிசைக்கு ஏற்றி விட்டது தயவு.
சுத்த சன்மார்க்க முயற்சியும்,பயிற்சியும்:
1 .ஆன்ம அகம் அறிந்தால் அல்லல் அகலும்.
அருள் உதயமானால் ஆனந்தம் அனுபவம் ஆகும்.
2 .அகம் இருந்து வருக அருளுடன்.
அனகமாக வாழ்க தயவுடன்.
3 .நித்திய நிலையான ஆன்ம அகம் பற்றி நில்
சத்திய பதியான அருட்ஜோதியோடு உறு
சுத்த தயவு செயலாக எதையுமே செய்
4 அறிவு நிலை இரு;அலை மனம் அசைவு அறு;
அருளின் ஒளி பெறு;ஒருமையில் விளைவுறு.
அருள் ஆண்டவர் அக விழிப்பை அருள்வாராக
உளத்தெளிவும் உடல் நலமும் தருவாராக..
தயவே உண்மை,தயவே கடவுள்,தயவுடன் வாழ்க.
தயவோடு உறு;தயவை இரு;தயவே செய்;
தயவே விழி;தயவே வழி;தயவே வாழ்வு
ஓங்குக ஒருமையும் தயவும்.

தொகுப்பு:

தயவுத்திரு.கோசலைஇராமன் அவர்கள்,
தயா ஒளி சிந்தனை மன்றம், சென்னை