மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்
மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
Read more...