தயவு வாழ்வு.
தயவே இறைவன் தனியுரு காண்மின்
தயவக நின்றே வுகரனந் தங்கதிர்
தயவாய் அனகம் தழைத்திடு கின்றதை
தயவால் உணர்ந்து தயாசெயல் புரிமின்
தயாநடு வான சதசத் தான்மா
தகரத் (து) அகரமும் சார்தனி வுகரத் (து)
உகரமும் கூடி யகரம தாயொளிர்
ஆன்மா தான்நம் அருவுரு நிலையாம்
ஊன்மா மையுறு உலையுறு காலே
காயம் இல்பர காயம் அருவாம்
உருவே மேலும் மேலும் பல்லுரு
தருவது பக்குவம் சாருதற் பொருட்டே
சார்ந்தகத் தயாநிலை தணவா திருந்து
ஆர்ந்திட வேண்டும் அன்பொடு அவனியில்
சேர்ந்திடும் திருநிறை செம்பொருட் செல்வம்
நேர்ந்திடும் நிலைத்திடும் நித்திய வாழ்வே.
சரவணானந்தா சுவாமிகள்.
நாகர்கோயில் தயவு குழுவை சார்ந்த நாங்கள் இந்த தயவு பாடலுக்கு பின்பு சுவாமிகளின் தயா விளக்க மாலை சிறப்புகள்,இதில் சுவாமிகள் சொன்ன முக்கிய சன்மார்க்க கருத்துகள் இடம் பெறும்.ஏற்கனவே திண்டுக்கல் சுவாமிகள் பகுதியில் தயாவிளக்க மாலை பாடல்கள் இடம் பெற்று உள்ளன.எனினும்,இப்போது மீண்டும் சிறிது வெளிபடுத்தும் அவசியம் உண்டாகி உள்ளது.இது வள்ளல் பெருமானின் ஆணையாக இருக்கிறது.தயா விளக்க மாலை பாடலை அன்பர்கள் அகம் உணர்ந்து படிக்க வேண்டும் என்பதே நோக்கம்.தயவுடன்,நாகர்கோயில் தயவு வள்ளலார் அன்பர்கள்.