Daeiou Vallalar anbargal
தயா விளக்க மாலையின் சிறப்பு.

அருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்க தயவு அனுபவமாம் "அருட்பெருஞ்சோதி,தனிபெருங்கருணை தான் இன்று ஆண்டவரின் தயவால் திண்டுக்கல் சுவாமிகள் மூலம் தயாவிளக்க மாலையாக வெளிபட்டு உள்ளது.இந்த விளக்க மாலை புத்தகமே பின் திண்டுக்கல் சுவாமிகள் வெளி படுத்திய தயவு பாக்களுக்கும்,சுத்த சன்மார்க்கஉரைநடை பகுதிகளுக்கும் முன்னோடியாக அமைந்தது.

1943-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த மாலையை எல்லாம் வல்ல ஆண்டவர் சுவாமிகள் மூலமாக உருவாக்கினார்.நம் தலைநடு பூசமாகிய காற்குளத்தும் ஒரு படித்தாய் அருட்ஜோதி தரிசனமாக கண்டு சூரியன்,சந்திரன்,குருவாய்

த ய வு கூடிய அனுபவம் தந்ததால் அதுவே தயவு பாடலுக்கு உதவி ஆனது.தயவு விளக்கம் வள்ளலாரின் 120ஆண்டில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தயவாக வெளிப்படும் என்ற திருவருளின் ஆணை இருந்துள்ளது.இது ஞான சித்தர்களின் வாக்கு ஆகும்.அருட்பிரகாச உண்மை தான் தயவு விளக்கமாக திருவருளால் உணர்த்த பட்டு அந்த விளக்க குறிப்பை எல்லாம் ஒரு 100 செய்யுள் அந்தாதி முறையில் அமைக்க கடவுள் சுவாமிகளுக்கு உதவினார்.அருட்பிரகாசரின் அருட்பெருஞ்சோதி தான் தயா விளக்க மாலையாக முதற் கண் வெளி வந்தது.

சத்விசாரமும்,பரோபரகாரமும்,ஒருமை வாழ்வும் தயா விளக்கமாலையில் வெளி ஆகி உள்ளது.கடவுள் எண்ணம் இல்லாதவர்களும் இந்த மாலையை படித்தால் அக ஒழுக்கம் பெற்று ஒருமை வாழ்வு,ஆனந்த வாழ்வு,சித்தி வாழ்வு நிச்சயம் பெறலாம் .இது கடவுள் வெளிபடுத்தும் உண்மை.வள்ளலாரின் ஜீவ காருணிய உண்மையை வெளிபடுத்தும் முயற்சி திருவருளால் மாலையாக வந்து உள்ளது. சுவாமிகள் வெளி படுத்திய வள்ளலார் கண்ட ஒருமை வாழ்வில் ஜீவகாருணியம் தான் சுத்த சன்மார்க்க அனக வாழ்வு என சுவாமிகள் மூலம் கடவுள் வெளி படுத்தி உள்ளார்.அந்த ஒருமை வாழ்வு கருத்துகளை இந்த மாலையில் சுவைத்து மகிழலாம்.

சுத்த சன்மார்க்க வாழ்வு என்பது தயவு வாழ்வு தான்.முன் சமய,மத சன்மார்கங்களில் தீட்சை,உபதேசம் முதலிய சம்பிரதாயங்களினால் பெற்ற எதுவும் மனிதனை இறை இன்ப வாழ்வில் நிலவ செய்ய வில்லை.சுத்த சன்மார்க்க அனக நெறியில் முதலில் பெறுவது சத் விசார தயா ஒழுக்கத்தால் சிர நடு தயா ஒளியில் நின்று வாழ்வது தான்.இது மந்திர,தந்திர உபாய சடங்குகளினால் வருவது இல்லை.சத்விசாரமும் ,ஒருமையுடன்,ஜீவ தயவு செயல்கள் செய்வதன் மூலம் நல்ல தயவு சித்தி வாழ்வு கிடைக்கிறது.