Daeiou Vallalar anbargal
சரவணானந்தர் அருளிய நாளந்தாதி குறிப்புகள்
🌴 ஜீலை 1 🌴

🌼🌻மகனே உன்னை நீ மா தயவில் காண்🌼🌻

🥀 சுத்த தயாஞானத்தினால் தான் உன்னை நீ அறிந்து கொள்ள முடியும். மகம் என்ற சொல் உள்விளங்கும் ஆன்மாவைக்குறிக்கும்.அந்த ஆன்மரூபியே உண்மை மகனாக விளங்குவதாகும்.
அதுவே நீ.🥀
 
அருள் அறியார் தமை அறியார்.அருளை உணர்ந்தவர்களே தயா நாம் என்று உணர்ந்து தயா ஆகிய அருட்நிலையிலிருந்து மாறாது சூழ்கின்ற அனைத்தையும் தயவாய் காண்பர். ஆண்டவருக்கு அருளுக்கு வேறாக வேறு ஒன்றையும் சன்மார்க்கியால் காணுதல் இயலாது.    


🌴ஆகஸ்ட் 1 🌴

🌼🌻பொருந்தலும் அருந்தலும் புலப்போகத்திற்கு அல்ல🌼🌻

❤️புலன் இச்சையினால் இராஜச தாமச குண மிகுதியினாலும் உண்டு களித்து இருத்தல் கூடாது.புலன் இச்சை இல்லாது உடலையும் உயிரையும் நன்கு விளங்கச்செய்து ஞானப்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக்கண்டு சார்வதே இலட்சியமாகும்.❤️
: 🌻இச்சையின்றி நுகர்தல்.ஆண்டவரே இலட்சியம் ஆனால் ஆகாரத்தில் இச்சை செல்லுமா?போன்றவை வள்ளல் வாக்கு.உலக வாழ்வில் உண்பதும் உடுப்பதும் எல்லா வல்ல ஆண்டவரை சார்வதற்காகவே புறநிலையில் செய்து வரல் வேண்டும்.
அருளியலோடு இந்த உலக வாழ்வியல் பணிகளை தயவினோடு செய்து வரல் வேண்டும்🌻


ஒப்பற்ற பேரறறிவு ஆகிய பெருந்தயவே பூரண இன்பம் -வள்ளலார்.
 🌴 ஜீலை 2 🌴

🍋🦜மா தயவாலே மகமிருந்து இழியா🍋🦜

🦚ஆன்ம(மகம்)நிலையினை தெளிந்து உட்கூடி நின்று விளங்குதல் வேண்டும்.அப்படி விளங்குவது மாதயவாலே என்கின்றார் சரவணானந்தர்.மா தயவு என்பது சுத்த பொன் தயவு பெருந்தயவாகும்.
மற்றப்படி வெற்று ஆன்ம பாவனையினால் சித்திர தீபம் போல் ஒளியின்றி இருத்தல் கூடும்.


🌴 ஆகஸ்ட் 2 🌴

🌼🌻அலகி லருள் தர அகமிருந்து ஆட்கொண்டு🌼🌻

🥀அகத்தே பொருந்தியுள்ள ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் அருட்பூரணத்தையே
(நிறைவான அருள்)வழங்க உள்ளார்.அத்தகைய பேரருள் கடவுள் அனுபவத்தைப்பெறுவது தான் நம் ஒவ்வொருவரின் குறிக்கோள் ஆகும்.🥀


🍋அலகில் அருள் என்றால் ஆண்டவரின் பேரருளினை எதனோடும் அளவிடவும் ஒப்பிடவும் இயலாது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிநிகர் இல்லாத தனிந்தலைமை தெய்வம்.ஆண்டவரே குறிக்கோளாக நம் எல்லோருக்கும் இருக்கணும் என்பதனை தயாநிதி.
சரவணானந்தர் நமக்கு எடுத்து காட்டி திருவருட்பிரகாச ஒருமையிலே விளங்குகின்றார். 🍋

🌴 ஜீலை 3 🌴

🌼🌻தியாவையுங் காண்க தயாவுரு பூண்க🌼🌻
🥀சுத்த ஆன்மநிலையாகிய கடவுளான்ம(தயா)நிலையில் இருந்து பிறழ்ந்து கீழ் இறங்காது சூழ்பவனவற்றை காண வேண்டும்.இதற்கு தயவு செய்து கொண்டிருத்தல் வேண்டும்.அப்படியிருந்தால் தயா இன்ப வடிவம் பெறலாம்.🥀

 🌼ஜீவகாருண்யம் என்பது ஆன்ம சமந்தம்(உருக்கம்) பற்றி உயிர்களுக்கு இயன்ற உதவிகள் செய்து தயா வடிவமாக இருத்தல்-வள்ளலார்.🌼

🌴 ஆகஸ்ட் 3 🌴

🍋🦜ஆட்டி வைக்கும் ஆடல் அரசின்🍋🦜

🥀ஆன்மாக்களுக்கு அருள் ஆனந்த அனுபவ நிலை உண்டாக பலவாகிய தேகங்களில் செலுத்தி ஆட்டி வைக்கின்றார் ஆண்டவர்.அவரே ஆன்மாக்களின் அகமும் புறமும் இருந்தும் சூழ்ந்தும் ஆட்டம் நிகழ்த்துவதால் அவரே ஆடலரசர்.நடராஜர்.🥀