அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
என்பும் பிறர்க்குஎனவே அருள்வழிநின்றே வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையபெருமக்காள் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்விலே
வளமொடு இன்புற்று வாழ்வாங்குவாழ்க எக்காலத்தும்!
இரகரகமாய்ப் பருத்தியுண்டு அவைதரும் துணியுண்டு
விதவிதமாய் அணிந்துகொள்ளு ஏன்நமக்கு வெளிவேடம்
இராசியத்தையும் கோசத்தையும் மறைத்திட அழகழாய்க்
கதர்ச்சட்டிக் கவசமுண்டே அதற்குஏன் இப்பக்கோவணம்?
கதர்ச்சட்டி டவுசர்பேன்ட்டு இல்லாக் காலத்தில்
ஒருவேட்டியை நறுக்கி உருவானதே கோவணம்
காரில்லாத காலத்தில கட்டைவண்டி சரிதாங்க
பருத்திக் குல்லாஇல்லையேல் முக்காடும் சரிதாங்க!
குல்லா பேன்ட்டு முழுக்கைச் சட்டைஇவைகள்
எல்லாம் இருந்தாலும் அவைகள் எல்லோருக்குமே
இல்லாத நிலைமைதான் பெரும்பாலும் இருந்தன
வள்ளல் காலத்தில் ஆகவேஅணிந்தார் முக்காடு.
இன்றோ நமக்கு எல்லாம்கிட்டுமே மிகமலிவாக
நன்றே அணிகமுழு வெள்ளாடைகள் மிகஎளிதாக
அன்பே நானோகுறை கூறுவதாக நீநினைக்காதே
நன்கே நீயும்யோசிக்கவும் இதுநவ நாகரிகக்காலம்!
முக்காட்டை நீவிட்டிடுக தூயவெண் குல்லாவைத்
தலைக்கட்டுக்கு ஈடாக இட்டுக்கொள் வேண்டுமெனில்
முழுக்கைச் சட்டையொடு நீள்காலாடை மிதியடிகளை
அழுக்கின்றி அழகாய் அணிந்துகொண்டே இன்புற்றிரு!
நிலவில்கிழவி வெற்றிலைஉமிழ்ந்த அக்கதையினி வேண்டாமே
நிலவின்கிளவி அறியப்பயணம் இன்றுவரிசையில் நிற்கின்றோமே
ஜோதிடம்சொல் கிரகத்தேவரையெலாம் தோண்டியே ஆய்கின்றோம்
ஜோதிதிடமிலா வீணுரையை இனிக்குப்பைத் தொட்டியேதிண்டிடும்!
புறவேடமிடுகின்ற சன்மார்க்கிகள் வெறும்போட்டோ போட்டிகளே
அருள்லாடம்அதைநீர் இடுவதற்குத் தகுதியிருந்தால் போட்டுக்கொள்
வள்ளலார்இட்டார் வெண்முக்காடு அவரைப்படம் எடுக்கமுடிந்ததா
நல்லவராய்இருக்க முயலாமல் முக்காடுஅணிகின்றாய் எதற்காக?
முக்காடு போட்டவர் எல்லோரும் சன்மார்க்கிஅல்லவே
சாக்காடு அற்றவர் யாராகினும்அவர் சன்மார்க்கிஆவரே
நல்லதே நினைந்து நல்லதுசெய்பவர் நல்லசன்மார்க்கியே
நல்லவர் தயவுஉள்ளவர் எம்மதமாகினும் அதுசன்மார்க்கமே!
தயவுமிகுந்த நற்புண்ணியர்கள் இம்மாயா உலகம்இதனில்
கயவென்பதைக் கணவிலும்கூட அவர்கள் கருதமாட்டார்களே
பயமெனும்பேயும் அவர்களை அணுகமுடியாதே அதனால்அருள்
மயம்எனும்ஓர் பெருவெளிக்குள்ளே அடைவர் பெருஞ்சுகமே!
முக்காடு மரணமில்லாத பெருந்தலைவரின் அடையாளம்
சாக்காடு பிணிமூப்பில் வருந்தும்நமக்கேன் அந்தவேடம்
சாக்கிரதநிலை எலாம்கடந்து சுத்தசிவ துரியாதீதம்நின்றே
ஆக்கியளிஐந் தொழில்செய்யும் நம்ஐயன்அணி அதைமதிநீ!
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்
நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்

2 Comments
E me I will follow it sooner sathyam1948@gmail.com 9962578086&42850216Dear Durai sathanan in my seventyth year your narration keeps me closer to Vallar inner urge to find his disappearence any sanmarghees can guide
Saturday, November 25, 2017 at 07:05 am
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Rama née namakku enthavruchira
Sunday, February 18, 2018 at 22:27 pm
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Write a comment