பொருளடக்கம்
* முன்னுரை 1
1. கடவுள் நிலை - ஒழுக்கம் 2
2. சுத்த சன்மார்க்க ஒழுக்கம் 9
3. சுத்தசன்மார்க்கத்தின் முக்கியத்தடைகள் 18
4. “சுத்த சன்மார்க்கக் காலம்” 21
5. சுத்த சன்மார்க்கப் பாடல்கள் 24
6. சுத்த சன்மார்க்கத்தில் “அன்னதானம்“ 28
7. சுத்த சன்மார்க்கத்தில் முதன்மையான
மற்றும் முக்கியமானவை 29
8. வள்ளற் பெருமான் கண்ட “கடவுள்” 29
O முடிவுரை / இந்நுளைலின் அவசியம் 30
] முன்னுரை ]
அன்பர்கúள, உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களளைல் மனிதர்கள் பேதப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
மேற்படி சமய, மத, மார்க்கங்களளைல் மனிதஇனம் பிரிவுப்பட்டு ஒன்றொடொன்று சண்டையிட்டும், எரித்துக் கொண்டும், சுட்டுக் கொண்டும் நிலையங்கûள இடித்துக் கொண்டும் வந்தனர். வருகின்றனர். இதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மேலும், நாம் உண்மை நிலையில் பழகாமல் ஒழுக்கம் இல்லாமல் நமக்குள் குரோதமாக, வாழ்ந்து வருகிறோம். விஞ்ஞான அறிவினை நம் புலனிச்சைகளுக்கே பயன்படுத்தி, அதனால் “புவி வெப்பம்” ஏற்பட்டு இயற்கையில் மாற்றம் உண்டாக்கி “ஆபத்து” நிலையை கண்டுள்úளளைம். இந்நிலைகள் மாற நமக்கு தேவை அந்த “ஒரே கடவுளின் உண்மை” தான். “கடவுளின் உண்மையை” உள்ளது உள்ளபடியே அறியாமல் இருப்பதால் உருவானதே இந்த பலவகைப்பட்ட சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள்.
கடவுளின் உண்மையறிய எல்லோராலும் ஒத்து கொள்ளக்கூடிய “வழி” வேண்டும். இந்த “சத்திய வழி”-யை கண்டவர்தான் வள்ளலார். தான் கொண்டியிருந்த “சைவ சமய” லட்சியத்தை கைவிட்டுவிட்டு, “எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் “பொதுவாக உள்ள உண்மை நெறியை” கண்டு அதனை வெளிப்படுத்தினார். சுத்த சன்மார்க்கத்தின் உண்மை “அக அனுபவமே”. அவ்வனுபவத்திற்கு “கருணையே” முதற்சாதனமாக உள்ளது. “கருணையை” விருத்திச் செய்ய தடையாய் உள்ளது சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு மற்றும் சாஸ்திரம், வருணம், உலக பழக்க வழக்கங்கள். மேலும், அந்த ஒரே “கடவுளின் நிலை”யைப் படிப்பால் அறியக்கூடியதாகவும் அல்லது அப்படியே படித்து மனப்பாடமாக்கிக் கொண்டவரின் பேச்சினாலும் அறிய கூடியதாகவும் இல்லை. முதலில்-”ஒழுக்கம்” ஒழுகுதல், இரண்டாவதாக-”விசாரசங்கல்பம்” உண்டாதல், மூன்றாவதாக-”கருணை வடிவம் பெறல்”, நான்காவதாக “தாழுங்குணம் வருதல்”, அதன்பின்பே “கடவுள் உண்மை” வெளிப்படுகிறது. இவை “கருணை நன்முயற்சியில்” பெறக்கூடியதாக உள்ளது. இங்ஙனமாக எல்லோருக்குமே பொது நெறியாக விளங்கக்கூடியதே “சுத்த சன்மார்க்கம்”, இவ்வழி உலகத்தாரை ஒன்றுச் சேர்க்கும். - ஆசிரியர்
1. கடவுள் நிலையும் - ஒழுக்கமும்
“உண்மைக் கடவுûள“ காட்டும் வள்ளலாரின் “சத்தியவழி” என்ன? எங்ஙனம் “வள்ளலாரின் தனி நெறி” எல்லோருக்கும் “உண்மைப் பொது நெறியாக” உள்ளது? இவையை ஆதாரங்களின் அடிப்படையில் காணுதல் கூடும். (உபதேச குறிப்பில் பக்கம் 438 திருஅருட்பா உரைநடைபகுதி - வள்ளலார் தெய்வநிலையத்தின் நான்காவது பதிப்பு 2004)
“சுத்தசன்மார்க்கத்தில்” கடவுளின் நிலையறிவது எப்படியெனில் என வள்ளற்பெருமான் குறிப்பிடுகையில்:-
“ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் “விசார சங்கல்பம்” உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.”
இவ்வாறாக வள்ளலார் சொல்லியபிறகு இதன் வாயிலாகத்தானே நாம் “திருவருள் நிலையை” அறியக்கூடும். மேற்ச்சொன்னவற்றை மீண்டும் ஒருமுறைப் படித்து வரிசைப் படுத்துவோம்.
சுத்த சன்மார்க்கத்தில் “திருவருள் நிலை” அறிவது எப்படியெனில்
Ø ஒழுக்கம் நிரம்பி,
Ø கருணையே வடிவாக நிற்கும் “விசார சங்கல்பம்” உண்டானால்,
Ø நாம் தாழுங்குணம் வரும்
Ø அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து,
Ø அறிவு விளங்கும்;
Ø ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
“ஒழுக்கம் நிரம்பி”
மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் “ஒழுக்கம்” நிரம்புதல் வேண்டும் என்பதையறிய வேண்டும். அதுவும் விசார “சங்கல்பம்” உண்டாகும் வரை ஒழுக்கம் பழகல் வேண்டும்.
ஒழுக்கம் என்பது என்ன?
ஒழுக்கம் என்பது சீலம் / நடை ஆகும்.
சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் கீழ்வருபவையை ஒழுக்கங்களளைக கூறுகிறார்கள் (பக்கம் 547 உரைநடைப்பகுதி அறிவிப்பு நாள் 11.01.1872)
(1) நற்குண ஒழுக்கங்கள்
· நல்லறிவு,
· கடவுள்,
· பக்தி,
· உயிரிரக்கம்,
· பொது நோக்கம்,
· திரிகரண அடக்கம்
2) நற்செய்கை ஒழுக்கங்கள்
· உண்மையுரைத்தல்
· இன்சொல்லாடல்
· உயிர்க்கு உபகரித்தல்
3) சுபகுணம்
· உண்மையறிவு
· உண்மையன்பு
· உண்மையிரக்கம்
மேற்படி ஒழுக்கங்கûள குணங்களளைகக் கொண்டு, அதன்படி செய்கை அமைதல் வேண்டும். இவை அனைத்தும் “உண்மையின்பால்” இருக்க வேண்டும்.
“கருணையே வடிவாக நிற்கும் “விசார சங்கல்ப” முண்டானால்...”
ஒழுக்கம் நிரம்பி விசார “சங்கல்பம்” உண்டாக வேண்டும்.
“சங்கல்பம்” என்பது என்ன?
(ஆதாரம் :- பக்கம் 392 உரைநடை)
“சங்கல்பத்தின்” பொருளும், விரிவும் யாதெனில்; விரிவாவது ஐந்து,
1. நிர்விகல்பம் : கடவுளறிவு
2. சவிகல்பம் : கடவுளறிவின் வியாபகம்
3. சங்கல்பம் (உள்ளழுந்தல்) :
Ø கரணம் யாதென்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில்
தோன்றிய அசைவு.
Ø ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும்
புடைபெயர்ச்சியே.
Ø நாம் நஷ்டமடையோம்-என்று உள்ளழுந்திய பிரக்ஞையே
4. விகல்பம் : (சிந்தித்தல்) பிரம சதாசிவ கால அளவு 5. கல்பம் : (சிந்தித்தை விசாரித்தல்)
விகல்பத்தில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள்.
ஆக, உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல், சிந்தித்தலை விசாரித்தல் இம்மூன்றுமே “சங்கல்ப, விகல்ப, கல்பம்” ஆகும்.
மேற்குறித்த “சங்கல்பம்”, “விசாரம்” செய்தல் வேண்டும்.
விசாரம் என்பது, (ஆதாரம் பேருபதேசம்)
கடவுûள தெரிந்துக் கொள்ளவேண்டும் என்கிற முக்கிய லட்சியத்திலிருந்து கொண்டு சிந்திக்க வேண்டும்.
நம் நிலை எப்படிப்பட்டது? தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்கின்ற நல்ல விசாரணை.
மேற்படி விசாரத்திற்கு, அதற்குத்தக்கப்படி, ஒருமித்தாவது; அல்லது தனித்தனியாகவாவது உங்களறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது அல்லது தனியாகவும் விசாரிக்கலாம்.
நமது அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில் அழுத்தமான முதல் திரை நீங்க வேண்டுமென கடவுளிடம் விண்ணப்பத்தித்தும், நினைத்தும், நமது குறையை ஊன்றியும்,
இவ்வண்ணமாக, இருக்கின்ற போதும், படுகின்ற போதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டுமென்கின்ற முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆக சங்கல்பம் உண்டாகும் வரை ஒழுக்கம் ஒழுகுதல் வேண்டும். இந்த “விசார சங்கல்பம்” உண்டானால் கருணை வடிவம் கூடும். ஆக, “ஒழுக்கம்” நிரம்பி கருணையே வடிவாக நிற்கும் “விசார சங்கல்பம்” உண்டானால் நாம் தாழும் குணம் வரும்.
இந்த “தாழும் குணம்” வந்த தருணத்தில் “திருவருட் சத்தி” (கடவுள் உண்மை / நிலை) பதிந்து அறிவு விளங்கும்.
பின்பு, மேற்படி பெற்ற “அறிவினால்” ஏற்படும் “அக அனுபவத்தில்” ஞான யோக அனுபவ நிலைகள் அறிந்து “சாகாகல்வியை” தெரிவிக்கின்ற மூன்று உண்மைகளளைன சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் ஆகியவை தெரியவரும்.
இதுவே சுத்த சன்மார்க்கம்; ஆக, சுத்த சன்மார்க்கத்தில் “ஆண்டவர் நிலை” அறிதலுக்கான உண்மை;
Ø ஒழுக்கம் நிரம்ப வேண்டும்.
Ø விசார சங்கல்பம் உண்டாக வேண்டும்.
Ø கருணை வடிவம் பெறல் வேண்டும்.
Ø தாழும் குணம் வரவேண்டும்
Ø இவைக்கு இடைவிடாது “கருணை நன்முயற்சி” பழகல் வேண்டும்.
இங்ஙனமாக, இங்ஙனமாகவே மட்டுமே வள்ளற்பெருமான் “சுத்த சன்மார்க்கத்தை” கண்டறிந்தார்கள்.
இந்த “தனிநெறியை” மற்றொரு ஆதார அடிப்படையில் உறுதிப்படுத்தலாம்.
அது எவ்வாறு எனில், : வள்ளற்பெருமான் பேருபதேசத்தில் “ஆண்டவர் என்னை ஏறாதநிலை மேல் ஏற்றியிருக்கின்றார். இந்த இடத்துக்கு துளைக்கிவிட்டது யாதெனில், “தயவு” தயவு என்னும் கருணைதான் என்னைத் துளைக்கிவிட்டது என்கிறார்கள்.
இக்கருணை வருவதற்கு “ஒருமை” வேண்டும். ஒருமை வந்தால் தான் கருணை வரும் என்கிறார் வள்ளலார்.
“ஒருமை” என்பது என்ன? (பக்கம் 414 உரைநடை)
“தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும், மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது ஒருமை” ஆகும்.
ஆக ஒழுக்கமும் அறிவும் ஒத்த இடத்தில் ஒருமையும், அந்த ஒருமையில் கருணையும், அக்கருணையால் “ஏறாத நிலைமிசை” ஏறக்கூடும் என்கிறார் வள்ளலார்.
ஆதலால், ஒழுக்கம் நிரம்பி சங்கல்பம் உண்டானால் “ஒருமை” நமக்கு வரும். கருணை வடிவமும் நாம் பெறுவோம். “கருணை” என்பது “எல்லா ஜீவர்களிடத்தும் தயவும்; ஆண்டவரிடத்து அன்பும்”(பக்கம் 416 உரைநடை)
வள்ளலார் பேரு உபதேசத்தில் “இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன்” என்று கூறுவதின் மூலம் அவரின் தனிநெறி வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் 1871 ஆகும்
எப்படியெனில்,
மாதம் வருடம்
பேருஉபதேசம் நாள் 10வது மாதம் (அக்டோபர்) 1873
கழிக்க : 2 ணீ வருஷம் 6 மாதங்கள் 2
4வது மாதம் 1871
ஏப்ரல்-1871ல் சுத்த சன்மார்க்க உண்மை கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். இதற்கு மேலும் ஆதாரமாக ஏப்ரல் மாதம் 1871ல் பெருமான் வெளியிட்ட அறிவிப்பில் “பெரும்பதி வருகை” யில் (நாள் 12.04.1871 - பக்கம் 545) காணலாம். தான் கண்டறிந்த நிலை “29 மாதத்திற்கு மேல்” விளங்கும் என அவ்வறிவிப்பில் குறிப்பிட்டுள்ளளைர்கள். ஆம், 30.01.1874ல் சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்பட்டார்கள்.
ஆனால், வள்ளலாரின் இந்த “முடிபான தனிநெறியை” மறைத்துக் கொண்டு, நாம் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அவரால் “லட்சியம் வையாது” விட்ட சமயத்திலும், அற்ப அறிவில் தான் இயற்றியதாக சொன்ன அவரின் “திருவருட்பா சமயப் பாடலையும்” பாடி, துதித்து வருகிறோம்.
வள்ளலார் சத்திய சிறுவிண்ணப்பத்தில் “எக்காலத்தும் முக்கியத் தடைகளளைக” உலகில் காணும் சமய, மத, மார்க்கங்கள் என அறிவித்ததினால் நாம் அவையில் லட்சியம் வையாமல் / அதில் ஐக்கியம் ஆகாமல் இருக்க வேண்டும். மேலும், காலம் தாழ்த்தாது “எல்லா உயிரையும் தன் உயிர் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.
இவ்வாறு தான் அறிவித்தும், அந்த “கடவுள் நிலையை” அறியக்கூடிய “சத்திய வழியை” மற்றவர்கள் யாரும் புரிந்திருக்கவில்லையே என்பதை தனது பேருபதேசத்தில் கீழ்வருமாறு கூறுகிறார்கள். “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
வள்ளற்பெருமான் சொல்லிய அந்த “உண்மை”:-
ஒழுக்கம் நிரம்பி, “விசார சங்கல்பம்” உண்டாகி கருணை வடிவம் பெற்று தாழும் குணம் பெற வேண்டும். அதன் பின்பே “கடவுளின் உண்மை” அறிய முடியும் என்பதே வள்ளலார் சொல்லி வந்த உண்மை” என்பதை நாம் புரிந்துக் கொள்வோம்.
உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் அனைத்தும் பொய் என்று கூறிய வள்ளற்பெருமான், மற்றொரு இடத்தில் என் மார்க்கம் உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் அனைத்திற்கும் பொதுநெறியாக விளங்கும் என்று கூறுகிறார். உண்மை என்பது எல்லோருக்கும் பொதுவானதாக அமையக்கூடியது ஆகும். இங்கு உண்மை என்பது ஒழுக்கமும், அறிவுமே ஆகும்.
இந்த உண்மையை (தனிநெறியை) புரிந்து கொண்டு இந்நிலையிலேயே வள்ளலாரை வெளிப்படுத்துவதே சரியாகும். கருணை நன்முயற்சியில் “ஒழுக்கம்” நிரம்புதலே சுத்த சன்மார்க்கத்தின் சத்திய வழியாகும். உண்மை கடவுûள அறிய, அறிந்து அக்கடவுளின் அருûளப் பெற நமக்கு தேவை “ஒழுக்கம்” என்பதை எவரால் மறுக்க முடியும்? இந்நிலையில் தான் இவர்தம் “தனிபெருநெறி” (சுத்த சன்மார்க்கம்) உலகில் காணும் சமய, மத மார்க்கங்களுக்கு எல்லாம் பொது நெறியாக விளங்குகிறது.
இது சத்தியம் சத்தியம் சத்தியம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோ
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
ஆஹ்
ஙழ்ள். அடஒ. அழ்ன்ப்
நிறு
2) “சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்”
ஆதாரம் : வள்ளலார் அறிவிப்பு நாள் 11.01.1872 மற்றும் சத்திய விண்ணப்பங்கள்
ஐ நற்குண ஒழுக்கங்கள் :
நல்லறிவு, கடவுள், பக்தி, உயிரெக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம்
ஐஐ நற்செய்கை ஒழுக்கங்கள்:
உண்மையுரைத்தல், இன்சொல்லாடல்,
உயிர்க்கு உபகரித்தல்
ஐஐஐ சுபகுணம்:
உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம்.
மேற்படி ஒழுக்கங்களில் நாம், இடைவிடாது பழகல் வேண்டும். மேற்படி ஒழுக்கம் பற்றி விளக்கம் பெற “திருக்குறள்” நமக்கு உதவும்.
குறள் விளக்கம்
ஐ. (1) நல்லறிவு
Ø “எப்பொரு ùளத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” (திருக்குறள் 355)
யாதொரு பொருள் யாதோர் இயல்பற்றாய்த் தோன்றினும், அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது அப்பொருளின் கண் நின்று மெய்யாகிய பொருûளக் காண்பதே மெய் உணர்வாவது.
பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகûள கழித்து, நின்ற உண்மையைக் காண்பது அறிவு ஆகும்.
Ø “பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு” (குறள் 358)
பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு.
அவிச்சை = மருள் = மயக்கம் = விபரீத உணர்வு.
Ø “சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு” (குறள் 422)
மனத்தை அது சென்ற புலத்தின்கண் செல்லவிடாது, அப்புலத்தின் நன்மை தீமைகûள ஆராய்ந்து தீயதின் நீக்கி நல்லதுகண் செலுத்துவது அறிவு.
Ø “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் 423)
யாதொரு பொருûள யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.
Ø “என்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு” (குறள் 424)
தான் சொல்லும் சொற்கûள அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆகுமாறு மனம் கொளச் சொல்லி; பிறவாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள் காண அரிதாயினும் அதனை காணவல்லது அறிவு.
Ø “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்” (குறள் 421)
அறிவு என்பது இறுதி (அழிவு) வராமல் காக்கும் கருவியாம் அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரனும் ஆம்.
உரைநடை பகுதியில் “வள்ளலார்”
ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்கûள விசாரியாமல் அந்தப் பொருûளக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்கûளயும் விசாரித்தறிதல் மன அறிவு. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு. ஞானசபையென்பது ஆன்மப்பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ùளளைளியின் அசைவே நடனம்.
ஐ. (2). கடவுள்
Ø “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” (குறள் 1)
எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகி முதலை உடையன, அதுபோல உலகம் ஆதி பகவன் முதலை உடைத்து.
Ø கடவுள் பற்றி வள்ளலார் சத்திய சிறு விண்ணப்பம்); இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சன்மார்க்க அனுபவ வெளியில்; இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய்; இயற்கை யின்ப நிறைவாகி யோங்கிய பெருந்தயவில் ஒருமைத் திருநடச் செய்கையை; எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டு திருவுளக் கருணையால் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித்தலைமை “ஓர் உண்மைக் கடவுள்” உண்டென்று நம் கருத்தில் கருதுதலே.... “
மேற்படியாக கருத்தில் ஆண்டவர் “ஒருவர்” உள்ளளைர் என்று கருதி, அவர் பொதுப்பட, உலகத்திலுள்ள யாவரும் சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு, வெளிப்படக் காரியப்படுகின்றார் எனவே சுத்த சன்மார்க்கத்திற்கு வாரீர் என்றே அழைக்கிறார் வள்ளலார்.
சத்திய அறிவால் “அறியப்படுகின்ற” அந்த பொது உண்மைக் கடவுள் ஒருவரே, அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்து, சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொது வெளியில் அறிவார், அறியும் வண்ணங்க ùளல்லாமாகி விளங்குகின்றார்.
ஐ. (3). பக்தி (உபதேசக் குறிப்பு பக்கம் 417 & 418)
Ø “பக்தி” என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல் வேண்டும். ஜீவகாருண்முண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விûளவிப்பது.
Ø ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.
ஐ (4). பொது நோக்கம்
உரைநடை பகுதி - வள்ளலார்
(பக்கம் 418 &426 உபதேசக்குறிப்பு)
Ø “தத்துவநியாயத்தை அனுசரித்துச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருகின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலியவைகள் ஆதலால், இவைகûள விட்டொழித்துப் “பொது நோக்கம்” வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருûளப் பெற்று அனந்த சித்தி வல்லபங்கûளப் பெற முடியாது. “
Ø ஆனந்த மென்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்கûளத் திருப்தியால் சந்தோஷிப்பித்துத் தான்திசயமின்றி நிற்றல். வள்ளற்பெருமான் மேலும் குறிப்பிடுகையில்,
Ø “உலகத்திலிருக்கின்ற எல்லா ஜனங்கûளயும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால், எல்லவரும் சகோதரர்களளைதலாலும், இயற்கை உண்மை யேகதேசங்களளைதலாலும் நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டியிருக்கின்றேன் என்கிறார்.”
Ø “எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து, தாங்கதவர்களளைகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்களளைகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும். அதற்கும் இடம் இல்லையாகில், பச்சாத்தாபத்துடன் கடவுûளப் பிரார்த்தித்து இன் சொல்லினால் இனிக்கச் செய்து, இருப்பதே மேலான புண்ணியம். “
ஐ (5). உயிரெக்கம்
உரைநடை பகுதி - வள்ளலார் (பக்கம் 416 & 420)
Ø சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
Ø ஜீவகாருணிய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில்: கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்யம். இது தான் முத்தியடைவதற்கும் சித்தியடைவதற்கும் முதற்படியாய் இருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.
Ø ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருûளப் பெறக்கூடுமல்லது, வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாதென்று உறுதியாக அறிதல் வேண்டும்.
Ø பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளளைல் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது ஜீவகாருணியத்திற்கு லட்சியமாக இருக்கவும்.
ஐ (6). திரிகரண அடக்கம்
மனம்
திரிகரணம் வாக்கு அடக்கம்
காயம்
குறளின் விளக்கம் :
மனம்
Ø “மனந்துளைய்மை செய்வினை துளைய்மை இரண்டும்
இனந்துளைய்மை துளைவா வரும்” (குறள் 455)
மனந்துளைய்மை ஆவது - விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல்
செய்வினை துளைய்மை ஆவது - மொழி, மெய்களளைல் செய்யும் நல்வினை
ஆக, மனந்துளையனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு அதனால் சொல்லும், செயலும் துளையனாம்.
Ø “மனத்தொரு வாய்மை மொழியின் தவத்தொரு
தானஞ்செய் வாரின் தலை” (குறள் 295)
Ø “ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்” (குறள் 33)
ஓவாமை - இடைவிடாமை
ஒல்லும் வகையான் அறவினை - தத்தமக்கு இயலும் திறத்தால், அறத்தினை (நல்லதை)
அறத்தினை செல்லும் வாயெல்லாம் செயல் - அஃது எய்தும் இடத்தானெல்லாம் செய்க
அதாவது, மனம், வாக்கு, காயம் இவற்றால் செய்யும் அறங்காளளைவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும், நற்செயலும் ஆகும். இவற்றை இடைவிடாது தத்தமக்கு இயலும் திறத்தால் செய்தல் வேண்டும்.
Ø யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகப்பார் சொல்லிழுக்குப் பட்டு (குறள் 127)
Ø தீயினாற் சுட்டபுண் உள்ளளைறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு (குறள் 129)
மனம், வாக்கு, காயம்
Ø அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)
Ø காக்க பொருளளை அடக்கத்தை ஆக்கம்
அதனினுளைஉங் கில்லை உயிர்க்கு (குறள் 122)
உயிர்கட்கு அடக்கத்தினை மிக்க செல்வமில்லை, ஆகலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளளைகக் கொண்டு அழியாமல் காக்க.
Ø ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 126)
ஐஐ. நற்செய்கை ஒழுக்கங்கள்
ஐஐ (1). உண்மையுரைத்தல்
குறள் விளக்கம்
Ø வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல் (குறள் 291)
பிறிதோருக்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்கûளச் சொல்லுதல்
Ø பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின் (குறள் 292)
புரைதீர்த்த நன்மை பயக்குமாயின் = பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்
பொய்மையும் வாய்மை யிடத்த - பொய்மைச் சொற்களும் மெய்மைச் சொற்களின் பால ஆம்.
Ø உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ùளல்லாம் உளன் (குறள் 294)
தன் உள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகல் வேண்டும். நற்செய்கை ஒழுக்கங்கள்
Ø தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 193)
ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக; பொய் தீதானாயின், அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக்கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்.
ஐஐ (2). இன்சொல்லாடல்
Ø சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (குறள் 200)
சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயனுடைய சொற்கûளச் சொல்லுக; சொல்லில் பயன் இலாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்கûளச் சொல்லாது ஒழிக.
Ø நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருல் (குறள் 999)
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடும் கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருள்பால் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகல் பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம்.
ஐஐ. (3) உயிர்க்கு பகரித்தல்
Ø மன்னுயி ரோம்பி அருளளைள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை (குறள் 244)
மன் உயர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்கûளப் பேணி அவற்றின் கண் அருளுடையனாவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.
Ø கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். (குறள் 260)
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கைகுவித்துத் தொழும்.
ஜீவகாருண்யம்
ஜீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை, இவைகளளைல் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதாயிலும் கேட்பப்போதாயிலும் இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாயிலும் ஜீவஇரக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.
சுத்த சன்மார்க்கத்தார் அனைவரும், எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களளைகி நம்மாற் கூடியமட்டில் அந்த பசியென்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே சுத்தசன்மார்க்க லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.
ஐஐஐ. சுப குணம்
Ø உண்மையறிவு
Ø உண்மையன்பு
Ø உண்மையிரக்கம்
“குணம், அறிவு, அன்பு, இரக்கம்” உண்மையில்பால் இருத்தல் வேண்டும்.
- முற்றும் -
3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகள் எவை எவை?
ஆதாரம் : சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்திலிருந்து
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுúள, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் ....”
ஆசாரம் - சாஸ்திர முறைப்படி ஒழுகை சாஸ்திர வழக்கம் (ஹஸ்ரீஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ் ற்ர் நஹள்ற்ழ்ஹள்)
சங்கற்பம் - மனோ நிச்சயம் / கருத்து
(க்ங்ற்ங்ழ்
விகற்பம் - மன மாறுபாடு (யஹழ்ண்ங்ற்ஹ், க்ண்ச்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங், ச்ஹய்ஸ்ரீஹ்)
ஆக, சமசர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர்களுக்கு வள்ளற்பெருமானால் அறிவிக்கப்பட்ட முக்கிய தடைகள்: உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் மனோ நிச்சயம் மற்றும் மன மாறுபாடு அடிப்படையிலான
“சாஸ்திரப்படியான” தொன்று தொட்டுவரும் பழக்கம்
(இன்ள்ற்ர்ம்)
வழக்கமாகச் செய்யும் சமயமத மார்க்கச் செயல் (டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீங்)
பழக்க மரபு / முறை (மள்ஹஞ்ங்)
மனோ நிச்சயத்தில் / மனோ வேறுபாட்டில் அமையும் எல்லாவித கருத்து (ல்ன்ழ்ல்ர்ள்ங்) நோக்கம், திட்டம் (ண்ய்ற்ங்ய்ற்ண்ர்ய்) உருவங்கள், அடையாளம் (க்ங்ள்ண்ஞ்ய்) உணர்ச்சி (ம்ர்ற்ண்ஸ்ங்),
வேறுபாடான பல வகைகள் (யஹழ்ண்ங்ற்ஹ்), மாறுபாடு (க்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்), வேற்றுமை (க்ண்ச்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்), கற்பனை, விருப்பம் (ச்ஹய்ஸ்ரீஹ்)
ஆகிய மேலே சொல்லப்பட்ட அனைத்தும் எங்கள் (சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்களின்) மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கிறார்கள். மற்றும்,
உலகாசாரம்-உலக வழக்கம் (இன்ள்ற்ர்ம் ர்ழ் ன்ள்ஹஞ்ங் ர்ச் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க்) “உலகாசார முறைப்படியான” வருணம், ஆசிரமம் ஆகிய சங்கற்ப விகற்பங்களளைவன:-
வருணம் - சமய, மத, மார்க்கங்களின் காணப்படுகின்ற நிறம், சாதி (இங்கு காணும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகைப்பட்ட சாதிகள்) குலம், துதி, மாதிரி (நற்ஹ்ப்ங்) மற்றும்
ஆசிரமம் - சமய, மத, மார்க்க வாழ்க்கை நிலைகளளைவன பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம்,சன்னியாசம்
மேற்படியான, வருணம் ஆசிரமத்தில் காணும் மனோ நிச்சய கருத்தின் (க்ங்ற்ங்ழ்ம்ண்ய்ஹற்ண்ர்ய், ண்ய்ற்ங்ய்ற்ண்ர்ய், க்ங்ள்ண்ஞ்ய்) அடிப்படையிலும் மன மாறுபாடு (ஸ்ஹழ்ண்ங்ற்ஹ், க்ண்ச்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங், ச்ஹய்ஸ்ரீஹ்) அடிப்படையிலும் காணப்படுகின்ற அனைத்து உலக வழக்கமும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளளைவன உலகில் காணும் சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்று சொல்லியதோடு விடாமல் அதனுடைய ஆசாரம், உலகாசாரம் ஆகியவற்றை எவை எவை என்று தெளிவு படச் சொல்லி, அவைகளில் லட்சியம் வைக்க கூடாது என்று சொல்லியுள்ளளைர்கள்.
மேலும், வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்க உபதேசக் குறிப்பில் குறிப்பிட்டது யாதெனில் :-
பரிபாசை அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாய நம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமய மதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாக்கிய வசன அக்ஷர தத்தவ பவுதிகள் முதலியவையும் பரிபாû‘யாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை எடுப்பது வியர்த்தம் (வியர்த்தம் = பொருளிண்மை மற்றும் பயனின்மை - அக்ஷள்ங்ய்ஸ்ரீங் ர்ச் ஙங்ஹய்ண்ய்ஞ் ஹய்க் ன்ள்ங்ப்ங்ள்ள்ய்ங்ள்ள்) பரிபாசை = மரபு முறையான குறியீடுகள் - போலியானவைகள்)
சுத்த சன்மார்க்கத்தில் நாம் ஒழுக்கங்கûள நிரப்பிக் கொள்ளும் தருணத்தில் இவை அனைத்தும் (சமய, மத மார்க்கங்கள் மற்றும் அவற்றின் மந்திரம், சடங்கு உட்பட அனைத்தும்) கற்பனைகள் என்று அறியவரும்.
4. வள்ளலாரின் “தனிநெறி”- வெளிப்பட்ட காலம் ஏப்ரல் 1871
இதுவரை வெளிவராத ஒரு சத்திய ஆய்வு அன்பர்களின் மேலான பார்வைக்கு .... அன்புடன் சமர்பிப்பவர் - அடஒ. அதமக வள்ளற்பெருமானின் “தனிநெறி” வெளிப்பட்ட காலத்தை அவர்தம் “சத்திய வாக்கியப்படியே” காணக்கூடியதாக உள்ளது.
ஆதாரம் : பேருபதேசத்தில் : “இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டியிருப்பார்கள். நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. மேலும் ...“சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை...” என்கிறார் வள்ளற் பெருமான்.
Ø கேள்வி : வள்ளற் பெருமான் அவர்கள் எதை இரண்டரை வருஷமாக” (2 வருடம் 6 மாதம்) சொல்லிக் கொண்டு வந்தார்கள்?
பதில் : வள்ளற் பெருமானால் அறியப்பட்ட “தனிநெறி” யாகிய சுத்த சன்மார்க்கம் அதன் சத்திய வழி
Ø கேள்வி : சமரச சுத்த சன்மார்க்கக் காலம் எவ்வாறு கணக்கிடப்படலாம்.
பதில் : வள்ளற் பெருமானின் “சத்திய வாக்கியம்”மூலம்
Ø கேள்வி : “சத்திய வாக்கியம்” என்றால் என்ன?
பதில் : உண்மை கணக்கீடு / உண்மை மேற்கோள்.
Ø கேள்வி : வள்ளற் பெருமான் அவர்கள் “சத்திய வாக்கியமாக” சொல்லப்பட்ட இடங்கள் சில கூறுக.
பதில் : சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் உள்ளன.
1. “....எல்லாமாகிய இயற்கையின்பக் கடவுúள! தந்தையென்பவனது சுக்கிலப்பையின்கண், யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி தாயென்பவளது சோணிதப் பையின்கண் சென்றடைந்த கணப்போதிற்கு முன் கணப்போது வரையுமாக, என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதாயிரம் (1,09,60,000) கணப்போது பரியந்தம் ....”
2. “... அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுúள! தாயென்பவளது சோணிதப் பையின்கண் யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி இவ்வுலகில் தோன்றிய கணப்போதிற்கு முன் கணப்போது வரையுமாக, என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஆறு கோடி நாற்பத்தெட்டு லட்சக்கணப்போது பரியந்தம் ... (6,48,00,000)
மற்றும் 3. “... பேருபதேசத்தில் இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன்” .... (2 வருடம் 6 மாதங்கள்) இங்ஙனமாக வள்ளற்பெருமான் கால கணக்கீடாக பல இடங்களில் கூறியுள்ளளைர்கள். ஆண்டவரின் வார்த்தைகள் சத்தியமாகும். (உண்மையாகும்).
ஆக, வள்ளலாரின் தனிநெறி - சுத்த சன்மார்க்கம் - சத்திய வழி வெளிப்பட்ட காலம்
வள்ளற் பெருமான் அருளிய பேருபதேசம் 10 1873
(அக்டோபர் 1873)
கழிக்க: இரண்டரை வருசமாக சமரச சுத்த
சன்மார்க்க தத்துவம் சொல்லி வந்தது 6 2
(2 வருடம் 6 மாதம்)
தனிநெறி வெளிபட்ட காலம் 4 1871 (ஏப்ரல் 1871 முதல்)
மேற்படி காலத்தை மேலும் உறுதிபடுத்த ஆதாரம் :
ஏப்ரல் 1871 லிருந்து வள்ளற் பெருமானால் அருளப்பட்ட அனைத்துமே “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க” தனிநெறியின் அடிப்படையிலேயே உள்ளது.
ஏப்ரல் 1871 லிருந்து வள்ளற்பெருமானால் அருளப்பட்டவைகள் :
சமரச சுத்த சன்மார்க்க பெரும்பதி வருகை 1871 ஏப்ரல் மாதம்
சமரச சுத்த சன்மார்க்க பாடசாலை 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை விளம்பரம் 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாலையிலுள்ளளைர்க்கு
இட்ட ஒழுக்கக்கட்டûள 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பிரார்த்தனை 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை வழிபாட்டு விதி 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார் பழக்க விதி 1872
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க “சித்திவளளைக விளம்பரம்”1873
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சித்திவளளைக
வழிபாட்டு விதி 1873
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்க்கு இட்ட இறுதிக்கட்டûள 1874 மற்றும்
அருட்பெருஞ்ஜோதி அகவல் 1872; சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பங்கள் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க உபதேசக் குறிப்புகள். (ஏப்ரல் 1871 - ஜனவரி 1874)
ஆதாரம் : ஏப்ரல் 1871ல் “சுத்த சன்மார்க்க தனிநெறி” வெளிப்பட்டவுடன் முதல் அறிவிப்பு “சுத்த சன்மார்க்கப் பெரும்பதி வருகை”. சுத்த சன்மார்க்கத்தில் பெருமானால் கண்டறியப்பட்ட “கடவுள்” யார் என்று இங்கு குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்.
அஃது; “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்கûளக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருûள நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதாரு தடையு மில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.”
மேலும்,குறிப்பிடுகையி
இது 29 மாதத்திற்குமேல்.” (இங்கு ஒரு சத்திய கணக்கீடு தருகிறார்கள்)
அன்பர்கúள, இங்கு “29 மாதத்திற்கு மேல்”, என்பது சத்திய வாக்கியமாகும். 29 மாதத்திற்குமேல் என்பது 2 வருடம் 5 மாதத்திற்கு மேல் ஆகும். ஆம் மேற்படி 29 மாதத்திற்கு பின்பே, நம் வள்ளற்பெருமான் சத்தியமிக்க “பேருபதேசம்” அருளியது 22.10.1873 மற்றும் சுத்த சன்மார்க்க உண்மைப்படியே “சுத்த பிரணவ ஞான தேகத்தோடு” வெளிப்பட்டது 30.01.1874 ஆகும்.
வள்ளற்பெருமான் கூறுகையில் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துளைக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் துளைக்கி விடவில்லை” என்கிறார்கள்.
மேலும், நீங்களும் விட்டுவீட்டீர்களளைனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்” என்கிறார்கள். எனவே “வள்ளற் பெருமான் தனிநெறியை” யே முன்னிலைப் படுத்துவதே சிறப்பாகும். அதுவே சரியாகும். ஆக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முதன்மையான மற்றும் முக்கிய பகுதிகளளைக விளங்குபவைகள் ஏப்ரல் 1871 க்குப் பின்பு சுத்த சன்மார்க்க தனிநெறி அடிப்படையில் வெளியானவைகள் மட்டுமே. சுத்த சன்மார்க்கம் வெளிப்பட்ட ஆண்டு, வள்ளற் பெருமானால் கண்டறியப்பட்ட கடவுளின் உண்மை ஏப்ரல் 1871 என்பதை வள்ளற்பெருமானின் சத்திய வாக்கியம் மூலம் அறிந்திடுவோம். வள்ளற்பெருமானின் இந்த தனிநெறியே (சுத்த சன்மார்க்கம்) சத்தியமாக உள்ளது. இந்த நெறியின் அடிப்படையிலேயே கடவுûள சத்தியமாக காணமுடியும். இது போல் உலகில் யாரும், எந்த மார்க்கமும், இல்லை.
5. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் :
சுத்த சன்மார்க்க அடிப்படையில் அமையப்பெற்ற பாடல்கûள ஆறாவது திருமுறை என்றும் “திருவருட்பா” ஸ்தோத்திரப் பாடல்கள் என்றும் அழையாமல், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் என்றழைப்பதே சாலச்சிறந்தது.
ஆதாரம் : வள்ளற் பெருமான் அருளிய “பேருபதேசம்” 22.10.1873
அ. “.... சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம், முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழுஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் ....”
ஆ. “... இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டியிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படி போய்விட்டது. பார்த்தீர்களளை! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை. நான் இயற்றிய ’திருவருட்பா’ வில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்கúள போதும். அந்த ஸ்தோத்திரங்கûளயும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்கûளயும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகúள சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”
இ. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களளைனால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களளை? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் துளைக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் துளைக்கி விடவில்லை. .... என்னை ஏறாநிலைமிசையேற்றிவிட்டது. யாதெனில் தயவு, தயவு என்னும் கருணைதான் என்னைத் துளைக்கிவிட்டது. நிற்க
Ø வள்ளற்பெருமான் எவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்றார்?
சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் ....
Ø எந்தச் சமயத்தில் அவர்கள் லட்சியம் வைத்திருந்தார்கள்?
சைவ சமயத்தில்
Ø அதற்குச் சாட்சியாக எதைக் குறிப்பிட்டார்கள்?
தான் இயற்றிய ‘திருவருட்பா’ ஸ்தோத்திரப் பாடல்கள்
Ø திருவருட்பா-வில் என்ன சொல்லியிருந்தார்கள்?
சைவ சமய ஸ்தோத்திரங்கள்
Ø மேற்படி ‘திருவருட்பா’ இயற்றியதற்குக் காரணம் என்ன என்று வள்ளலார் குறிப்பிட்டார்கள்?
அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
Ø வள்ளலாரை ஏறாதநிலைமேல் ஏற்றிவிட்டது எதனால்?
‘திருவருட்பா’ உட்பட சைவ சமயத்தையே விட்டுவிட்டதினாலே பெரிய லாபத்தைப் பெற்றேன் என்கிறார்கள்.
Ø இதன்மூலம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தார்கள் செய்ய வேண்டியது என்ன?
வள்ளலார் இயற்றிய ‘திருவருட்பா’ ஸ்தோத்திரங்கûள (சைவ சமய ஸ்தோத்திரங்கள்) விட்டுவிட வேண்டும். அவற்றின் மீது லட்சியம் வைக்க கூடாது.
நிற்க
Ø ‘திருவருட்பா’ ஸ்தோத்திரப்பாடல்கள் அடங்கிய 1 முதல் 4 திருமுறைகள் வரை வெளியிட்ட வருடம் 1867
Ø மேற்படி சைவ சமய ஸ்தோத்திரப்பாடல்களுக்கு ‘திருவருட்பா’ என்று பெயரிடப்பட்டது
Ø உலகத்தார் அனைவருக்கும் பொதுவாக அமைந்த மார்க்கத்தின் பெயர் “சமரச சுத்த சன்மார்க்கம்”, வள்ளலார் சத்திய வழியை கண்ட வருடம் ஏப்ரல் 1871.
Ø 30.01.1874 க்கு பின்பும் தொழுவூரர் வேலாயுத முதலியரால் செய்யப்பட்ட செயல்கள் என்ன?
· 1880ல் ஐந்தாம் திருமுறை வெளியீடு, மேற்படி ஐந்தாம் திருமுறையில்
‘திருவருட்பா’ சமய ஸ்தோத்திரப் பாடல்கள் ........
பிள்ûளயார் திருப்பதிகங்கள் நான்கு (4)
ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்திய திருத்தணிகைப் பதிகங்கள்-47 கந்த கோட்டப் பதிகங்கள் உட்பட சமய ஸ்தோத்திரங்கள் அடங்கியது.
· மீண்டும் 1882 ல் ஐந்தாம் திருமுறையின் இரண்டாம் பதிப்பு
· 1887 ல்1 முதல் 4 ஆம் திருமுறையின் இரண்டாம் பதிப்பு
- நிற்க -
ஆக, தொழுவூர் வேலாயுதம் அவர்கள் சமயப்பற்றிலிருந்து விடுபடாமல் இருந்தார்கள் என்றும் ‘சுத்த சன்மார்க்கத்தை அனுஷ்டிக்கவில்லை’ அல்லது புரிந்திருக்கவில்லை என்பதே நிருபணமாகிறது.
Ø சுத்த சன்மார்க்கம் வெளிப்பட்ட பின்பும் நான்கு திருமுறைகளின் இரண்டாம் பதிப்பு 1887-ல் மற்றும் “ஐந்தாம் திருமுறை” (1880 மற்றும் 1882)யையும் வெளியிட்ட செயல் “சமரச சுத்த சன்மார்க்க தனிநெறியை மூடி மறைத்திடச் செய்த முதல் செயல்”
- நிற்க -
இங்கு வள்ளற்பெருமான் சொல்லியவைகள் மீண்டும் நினைவில் கொள்வோம்
“இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைபட்டியிருப்பார்கள். நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. மேலும் ...”சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப்புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை ...”
“திருவருட்பா”-வில் அடங்கிய ஸ்தோத்திரப்பாடல்கள் மீது லட்சியம் வையாதீர்கள் என்றும் அவைகûள கைவிட்டீர்களளைனால் என்னைப் போல் ஏறாதநிலைமிசை ஏறுவீர்கள் என்பதே வள்ளற்பெருமானின் சத்திய வாக்கியம், கட்டûளயாகும்.
வள்ளற்பெருமான் தனது “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை வழிபாட்டு விதி 18.07.1872”-ல்
“இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமென்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.” என்றார்கள்.
1871 முதல் 1874 வரை வள்ளற் பெருமானால் அருளப்பட்ட பாடல்கûள “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள்” என்று அழைக்காமல், சமய திருமுறைகளளைவன 1 முதல் 4 & 5 ஆகியவைகûள தொடர்ந்து ஆறாம் திருமுறை என்றும் அதன் பாடல்கûள - திருவருட்பா ஸ்தோத்திரங்கள்” என்று அழைக்கத் தேவையில்லை/ அழைக்கக் கூடாது. இது உலகத்தார்களிடத்திலும், சுத்த சன்மார் க்கத்தை அறிய விரும்பிவரும் அன்பர்களிடத்திலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். காரணம் வள்ளற் பெருமான் கூறுகையில் எனது சமயப் பற்றினை நான் இயற்றிய “திருவருட்பா ஸ்தோத்திரங்களில்” காணலாம் என்று குறிப்பிட்டுள்ளளைர்கள் (அன்று வெளிவந்திருந்தது 1 முதல் 4 திருமுறைகள்). எனவே சுத்த சன்மார்க்க சத்திய அடிப்படையில் அமையப்பெற்ற பாடல்கûள ஆறாம் திருமுறை என்றும், “திருவருட்பாப் பாடல்கள்” என்றும் பெயரிட்டு அழைக்காமல், “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறிப் பாடல்கள் அல்லது” சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் என்றே அழைத்திடுவோம் / அழைத்திடக்கூடும்.
6. சுத்த சன்மார்க்கத்தில் பசி நிவர்த்தி (அன்னதானம்)
சுத்த சன்மார்க்கத்தார் அனைவரும், எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களளைகி நம்மாற் கூடியமட்டில் அந்த பசி யென்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே சுத்தசன்மார்க்க லாபம் என்று அவசியம் அறிய வேண்டும். ஆக மேற்படி ஏழைகளுக்கு நம்மால் கூடியவரையில் பசியாற்றுவதே அன்னதானம் ஆகும். (நாம் நமக்குள் அன்பை பரிமாற்றி கொள்வது விருந்தோம்பல் ஆகும். அன்னதானமே சுத்த சன்மார்க்க லாபம், விருந்தோம்பல் மகிழ்ச்சியே.)
7. சுத்த சன்மார்க்கத்தின் முதன்மையான மற்றும்
முக்கிய பகுதிகள்
1. அருட்பெருஞ்ஜோதி அகவல்
2. சுத்த சன்மார்க்கப் பாடல்கள் (ஏப்ரல் 1871க்கு மேல்)
3. அருட்பெருஞ்ஜோதி அட்டகம்
4. சமரச சுத்தசன்மார்க்க சத்திய விண்ணப்பங்கள்-நான்கு
5. வள்ளற்பெருமானின் பேருபதேசம்
6. வள்ளற்பெருமானின் உபதேசக்குறிப்புகள் (ஏப்ரல் 1871க்கு மேல்)
7. சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்.
8. வள்ளற்பெருமான் கண்ட கடவுள் :
வள்ளற் பெருமான் சுத்த சன்மார்க்கத்தில் கண்ட கடவுள் யார்? என்று தனது சத்திய பெரு விண்ணப்பத்தில் கூறுகையில்,
இயற்கையுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கையின்ப நிறைவாகியோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுள்.
மற்றும்
அக்கடவுûள “அருட்பெருஞ்ஜோதி” என்று திருக்குறிப்புத் திருவார்த்தையால் மட்டும் குறிப்பிடாமல் கீழ்வருமாறும் “சத்திய சிறு விண்ணப்பத்தில்” குறிப்பிடுகிறார்.
அஃது,
இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினிரென்றும், இயற்கை இன்பின ரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும், அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதியரென்றும், அற்புதரென்றும், நிரதிசயரென்றும், எல்லாமானவரென்றும், குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும் பதியாகிய
பெருங்கருணைக் கடவுள்.
வள்ளற்பெருமான் கண்ட கடவுள் : பெருங்கருணை
ஆக, கடவுளறிவு : கருணை
முடிவுரை
இந்நுளைலின் அவசியம் பற்றி ஆசிரியர் கருத்து
அன்பர்கúள,
அனைவரையும் மிக்கத் தாழ்மையுடன் வணங்குகிறேன். வள்ளலாரை எதனால்? எதில்? சிறப்பாக அவரை காண்கிறோம்.
கருணை / அன்பு பற்றி கூறியதற்காகவா? அல்லது ஒழுக்கம் பற்றி கூறியதற்காகவா?
Ø “அன்பே சிவம்” என்றார் திருமூலர்.
Ø “...... ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்.
Ø “பக்தி இல்லையேல் நட்டமில்லை
ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் பாழ்” - சொன்னவர் கடவுள் இல்லை என்ற “நாத்திகர் தந்தை பெரியார்.”
Ø கருணைக்கு, ஜீவயிரக்கத்திற்கு ஒரு “மகாவீரர்” மற்றும் “கெளதமப் புத்தர்”
இங்ஙனமாக இருக்க,
வள்ளலார் எதை சிறப்பாகச் சொன்னார்?
எங்ஙனம் அவர் கண்ட நெறியை “தனிநெறி” ஆக கூறமுடியும்?
இதுவே நாம் முதலில் காண வேண்டும். அதுவும் ஆதாரங்களுடன்.
ஆதாரங்கள் திருவருட்பா உரைநடைப்பகுதி - தெய்வநிலைய வெளியீடு வருடம் 2004, அருட்பெருஞ்ஜோதி அகவல், விண்ணப்பங்கள், பாடல்கள் மற்றும் பேருஉபதேசம்
வள்ளலார் தாம் கண்ட மார்க்கத்திற்கு வைத்த பெயர் “சமரச சுத்தசன்மார்க்கம்“ ஆகும். ஆதாரம் - சபை வழிபாட்டு விதி 18-7-1872 (பக்கம் 551)
“இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும், சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை யென்றும், சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்க மென்றும் திருபெயர் வழங்குதல் வேண்டும். “
“சுத்த சன்மார்க்கம்“ என்றால் என்னவென்று வள்ளலார் கூறுகையில்
ஆதாரம்: உபதேசக்குறிப்பு : “சுத்த சன்மார்க்கம் என்பது யாதெனில்; சுத்தம் என்பது ஒன்று மல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சம மதானுபவங்கûளக் கடந்தது.”
மார்க்கம் என்றால் “துவாரம், வழி” வழியென்பது கடவுளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம் ஆகும். மேலும்,
சுத்த சன்மார்க்கத்தில் தான் கண்ட கடவுள் பற்றி கூறுகையில்; ஆதாரம் - சன்மார்க்கப் பெரும்பதி வருகை 12-4-1871 (பக்கம் 547)
“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும், தங்கள் தங்கள் அனுபவங்கûளக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.”
மேலும் (உபதேசக்குறிப்பு பக்கம் 402)
“சுத்த சமரசமென்பதற்கு நியாயம்; விந்து பரவிந்து இரண்டையும் மறுக்க சுத்தவிந்து வந்தது போலும், சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமய மத சன்மார்க்கங்கûள மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமசர சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம். (அந்நியமல்ல).”
“கடவுளின் உண்மை“ பற்றிக் கூறுகையில்
(ஆதாரம் - பேருபதேசம் 22.10.1873)
“தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.”
“ஆதியிலே கடவுள் உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.”
ஆக, கடவுளின் உண்மையை நம் முன்னோர்கள் கண்டுள்ளதாக இதன் மூலம் அறியலாம்.
எனவே வள்ளலார் மண்ணை போட்டு மறைத்ததை, பூட்டு போட்டு பூட்டியதை தான் (“கடவுளின் உண்மையை”) வெளிப்படுத்தினார்கள்.
அப்படியானால் எதில் வள்ளலார் சிறப்படைகிறார்?
அது, அக்கடவுளின் உண்மையை அறிந்து அருள் பெற அவர் கண்ட வழியாகிய “சுத்த சன்மார்க்கமே“ ஆகும்.
Ø “கடவுளின் உண்மையை” தான் கண்ட வழியின் (மார்க்கத்தின்) மூலமே அறியக் கூடியதாகவும் அக்கடவுளின் அருûளப் பெறக் கூடியதாகவும் உள்ளது என்றும்,
Ø உலகில் காணும் சமய, மத, மார்க்கங்கள் மற்றும் அவற்றின் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் மற்றும் கலைகள் மூலம் கடவுளின் உண்மை முழுமையாக அறியக் கூடியதாக இல்லை எனவும் கூறுகிறார். எனவே அவையில் “லட்சியம்” வையாதீர்கள் எனக் கூறியது மட்டுமில்லாமல் தன் மார்க்கத்திற்கு அவையை “முக்கியத் தடைகளளைக” அறிவித்தார். (ஆதாரம் - விண்ணப்பங்கள், அகவல், பாடல்கள் மற்றும் பேருபதேசம்)
(ஆதாரம் - சத்திய சிறு விண்ணப்பத்தில்)
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுúள ! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வி த்தருளல் வேண்டும்.” என்கிறார்கள்.
முடிவாக,
தன் மார்க்கமாகிய “சுத்த சன்மார்க்கத்தில்” கடவுள் நிலையறிவது எப்படியெனில்” என வள்ளலார் கூறுகையில், ஆதாரம் : (உபதேசக்குறிப்பு பக்கம் -438)
“ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால் இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.“
வள்ளலாரின் “தனிநெறி” எது? என அறிய
இதை “விசாரம்” / ஆய்வு செய்வதால் உண்மை “ஒருவாறு“ விளங்கும்.
“ஒழுக்கம்” - பெயர்ச்சொல் - பண்புப் பெயர்
“நிரம்பி” - நிரம்பு, நிரம்ப,நிரம்பி-வினைச் சொல் (யெச்சம்)
“கருணையே” (பண்புபெயர்) - “வடிவாக நிற்கும்”
(எதிர்கால வினைமுற்று) (ஒரு வெளிப்பாடு)
“விசாரம் சங்கல்பம்” - சங்கல்பம் (வினையில் அணையும் பெயர்ச்சொல்)
“விசாரம்” - பெயர் அடை
“உண்டானால்”- உண்டு + ஆ
உண்டு - ஒரு குறிப்பு வினை முற்றுச் சொல் “உள்ளத்தன்மையையுணர்த்தும்”
ஆ - வினாச்சொல்
மேற்படி இலக்கணம் மூலம் அறிவது (ஹள் ச்ண்ழ்ள்ற்) “ஒழுக்கம் நிரம்பி” என்பது தான் நிற்கிறது.
அஃது “ஒழுக்கம்” நன்க்ஷத்ங்ஸ்ரீற்-ஆகவும், “நிரம்பி” யங்ழ்க்ஷ -ஆகவும் நிற்பதை நான் காணலாம்.
ஆக,
உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் உள்ளதுபோல் “கடவுûள“ விக்கிரக வடிவமாகவோ, அருவமாகவே காட்டாமலும், மேலும் கடவுளின் அருûள பெற்றுத் தருவதாக மந்திரம், சடங்குகள், வேண்டுதல், தியானம் முதலிய சங்கற்ப விகற்பங்களும் சொல்லாமல், அவ் உண்மையை அறிவதற்கு ஒழுக்கம், அறிவு மட்டும் தேவை என்கிறார்கள். கடவுûள அறியக் கூடிய “வழியினை” மட்டுமே தன் மார்க்கத்தில் மிகத் தெளிவாகக் காட்டி அதன்படியே பழகினால் மட்டுமே கடவுளின் உண்மையை காண முடியும் எனக் கூறினார். அதன்படியே தானும் பழகி கடவுளின் அருûளப் (கடவுளின் உண்மையை) பெற்று “சகா நிலையைப்” பெற்றுக் காண்பித்தார்கள்.
இந்த “வழி” உலகத்தார் அனைவராலும் மிகச் சரியே என ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும், இவ்வழியே உலகில் காணும் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் “உண்மைப் பொது நெறியாக” விளங்குகிறது என்பதையும் நாம் உணரலாம். உலக்கத்தார் இதுவரை கொண்ட தத்தம் கடவுளரின் பெயரால் அமைத்த சமய, மத, மார்க்கத்தினால் சண்டைகளும், கொள்ûளகளும், கொலைகளும், தான் இதுநாள் வரை நடந்து வந்துள்ளது. ஆனால் சுத்த சன்மார்க்கம் ஒன்றே “கடவுûள“ சில நிலைகளுக்கு அப்பால் வைத்து மற்றும் எல்லாரையும் ஒன்று சேர்க்கும் பொது குணங்கûள பெற்றப் பின்னர் தான் உணர முடியும் எனக் கூறுகிறது. அஃது
Ø ஒழுக்கம் நிரப்பி,
Ø விசாரம் செய்து சங்கல்பம் உண்டாக்கி
Ø கருணை வடிவம் பெற்று
Ø தாழும் குணம் வந்து அதன் பின்பே
மனிதனுக்கு “கடவுளின் உண்மை” வெளிப்படுவதாக உள்ளது என்ற “சத்தியத்தை” கூறிய உலகில் ஒரே மகான் “வள்ளலார்” ஒருவரே.
இந்த “கடவுளின் உண்மை” அறிவதே உயர்வு உடையதாகிய மனித தேகத்தைப் பெற்றவர்களின் “லட்சியமாக” உள்ளது என்கிறார் வள்ளலார்.
இப்பக்குவ நிலைக்கு “கருணை நன்முயற்சி பழகல் வேண்டும்” என்கிறார்.
“கருணை”யால் மட்டுமே கடவுளின் அருûள பெறக் கூடியதாகவும் உள்ளது என மிகத் தெளிவாக கூறுகிறார்கள். அக்கருணைக்கு ஒருமை அவசியம் வரவேண்டும் என்கிறார். ஒருமை என்றால் (ஆதாரம் பக்-414) ஒழுக்கமும், அறிவும் ஒத்தயிடத்தில் தானே தோன்றுவது.
வள்ளலார் தன் மார்க்கத்தினைப் பற்றி மேலும் கூறுகையில், (பக்கம் 439)
“சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளளைன அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்த்தமாகிய “அக அனுபவமே” உண்மை என்கிறார்.
மேலும், (பக்கம் 437)
தான் கண்ட அனுபவ நிலைகûள “அனுபவத்தினாலறிக” அவையை “படிப்பால் அறியக் கூடாது” என்கிறார்.
ஆதலால், “இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்” என மிகத் தெளிவாக கூறுகிறார்.
இங்ஙனம் இருக்க,
வள்ளலார், அந்த “ஒரே கடவுள்” “பெருங்கருணையாக” உள்ளது அதுவே அகம், அகப்புறம், புறம் புறப்புறம் நீக்கமற நிறைந்துள்ளளைர் என்பதை எங்ஙனம் நமக்கு வெளிப்படுத்த முடியும்? என வினாக்கள் எழலாம்?
ஆம். மிகச்சரியே.
சுத்தசன்மார்க்க நிலைகள் “அக அனுபவத்திலேயே தான் விளங்கும்” (ஆதாரம் பக்கம் 438)
மறுக்கவில்லை.
ஆனால், வள்ளலார் மற்ற ஞானி, யோகி, வேதாந்தி, சித்தாந்தி போல் சமயத்தில் ஐக்கியம் ஆகாமல் மேற்படி அவர்கள் கண்டு சொல்லிய நிலைகûள கடந்து அதனுக்கு அப்பால் துளைய வெளியில் தான் “உண்மைக்கடவுளின்” அருள் பெறக் கூடியதாக உள்ளது எனக் கண்டறிந்தார்கள். தான் பெற்ற இந்த இன்பத்தை “ஆன்ம-நேய ஒருமைப்பாட்டுரிமையில்” அந்த மெய்யறிவு உடையோர்களுக்கு தெரிவிப்பதற்காகவும் அந்த நிலையை உலகத்தார் அனைவருமே பெறக்கூடியதாகவே உள்ளது என்ற சத்தியத்தை பாடலாக, உரைநடையாக, பேருபதேசமாக விளக்கினார்கள்.
ஆனால்,
தன் மார்க்கத்திற்கு “வாரீர் வாரீர்” என அழைத்து நம்மிடம் “கடவுள்” யாராக கருதக்கூடும் என அவர் கீழ்வருமாறு தெரிவிக்கிறார். (ஆதாரம் சத்தியச் சிறு விண்ணப்பம் பக்கம் 559)
“எல்லா அண்டங்கûளயும், எல்லா உலகங்கûளயும், எல்லா உயிர்கûளயும், எல்லாப் பொருள்கûளயும் மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுûள உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகùளல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும்”
என்பதின் மூலம் வள்ளலார் “காட்டிய கடவுள்” யார் என அறிய வேண்டும்.
ஓர் உண்மை கடவுள் “உண்டென்றும்”, “விளங்குமென்றும்” உண்மையின்பால் நம்மை கருதச் சொல்கிறார். எனவேதான் வள்ளலாரின் தனிநெறி எல்லா சமயங்களுக்கும், மதங்களுக்கும், மார்க்கங்களும் பொது நெறியாக விளங்குகிறது.
அன்பர்கúள,
ஆக, ஒழுக்கம் நிரப்பி சங்கல்பம் பெற்று அதன் பின்னரே “கடவுளின் உண்மை” பதிந்து அறிவு விளங்குகிறது. பெற்ற “அறிவினால்” ஏற்படும் “அக அனுபவத்தில் ஞான யோக அனுபவ நிலைகள் ஏழு அறிந்து, சாகாகல்வியை தெரிவிக்கின்ற மூன்று உண்மைகளளைவன சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் ஆகியவை தெரியவரும்.
மேலும் வள்ளற்பெருமான் உலகில் காணும் சமய, மத, மார்க்கங்கûள தன் மார்க்கத்திற்கு முக்கியத் தடைகளளைக அறிவித்து மற்றும் அவையின் ஆசாரப் பழக்கவழக்கம் (சாஸ்திரபடியானவை) மற்றும் சாதி, வாழ்க்கைமுறை, உள்ளிட்டவைகளில் எதிலும் மனம் பற்றாமல் இருக்க வேண்டும் என்கிறார்.
ஆக முடிவாக,
“வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில்” காணப்படுவது
“ஒழுக்கமே”.
சுத்த சன்மார்க்கத்தில் செயல்பாடு
“ஒழுக்கம் நிரப்புதல்” மற்றும் “நல்ல விசாரணை செய்தல்”
சுத்த சன்மார்க்கத்தில் பயிற்சி
இடைவிடாது கருணை நன்முயற்சி;
சுத்த சன்மார்க்கி என்பவர்
ஒழுக்கமுடையவர், தாழும் குணம் பெற்றவர்.
சுத்த சன்மார்க்கத்தின் பயன்
கடவுள் உண்மை பதிந்து அறிவு விளங்கும். அனுபவத்தில் ஞானநிலைகள் ஏழு அறிந்து உண்மைகள் மூன்று தெரியவந்து மரணமில்லா பெருவாழ்வு கிட்டும்.
முற்றும்
இந்நுளைலின் அவசியத்தை உங்களின் மேலான பார்வைக்கே வைக்கின்றேன்.
நன்றி, வணக்கம்
அன்புடன் ஆசிரியர் APJ.ARUL
நிறுவனர்-கருணை சபை-சாலை
உத்தங்குடி, மதுரை.