எவ்வளவோ காலத்திற்கு முன்பே, ஆன்மாவின் நிலையைப் பற்றியும், இயல்பைப் பற்றியும் உண்மையை மனிதன் அறிந்து கொண்டு விட்டிருந்தான். ஆம், ஆன்மாவின் உள்ளிருக்கும் கடவுள் தன்னுண்மையை வெளிப்படுத்தி, அறிந்து கொள்ளச் செய்திருந்தார். உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடும், நம்பிக்கையோடும் வேண்டி நின்ற மனிதனின் உள்ளத்திலே கடவுளும் அவனுக்குத் திருவுளம் இரங்கி உண்மையைப், பரிபாகத்திற்கு ஏற்ற அளவு வெளிப்படுத்தி விடுகின்றார். மனிதனுக்கு அந்த உண்மையின் பொருள், அவனது பக்குவ நிலைக்குத்தக விளங்குகின்றதாம். அன்று, மனிதன் அந்த உண்மையை அறிந்து கொண்டிருந்த்து, அறிவளவில் விளங்கி ஏக தேசப் பயன் கொண்டு மகிழ்ந்து நின்று ஒழியவே செய்திருந்ததாம்.
அன்று அந்த ஆன்மாவாகிய அம்பலத்திருவாயிலிலே நின்று வேண்டிய அறிவுருவான மனிதனுக்கு, ஆண்டவர் அன்புடன் உரைத்தது என்னவென்றால், அவ்வுண்மைக் கடவுள், அந்த ஆன்மத்தளியிலே எல்லாம் வல்லவராக இருக்கின்றார் என்பதும், அவரை அடைந்தவர் அந்த பேராற்றலைப் பெற்று பெரு மகிழ்வெய்தி வாழலாம் என்பது தான். அவ்வுண்மை என்றும் பொய்ப்பதில்லை. ஆனால் அன்றைய மனிதன், அவ்வுரைக்குத்தக அந்த பதியைச் சார்ந்து நின்று பெருமகிழ்வும் பெற்றான்.
மனித உருவோடு வாழ்ந்தவரையும், அவ் ஆன்ந்தானுபவமும் இருந்து தேக அந்தியத்தோடு எல்லாம் மறைந்து விட்டது. ஏனெனில் அவன் தேகமே தனது வாழிடமாகவும், ஆன்மாலயம் கடவுளை வழிபட்டு ஒன்றி இருந்து மகிழும் இடமாகவும் கொண்டிருந்தான். ஆகையால் அகத்தில் மூழ்கியவனுக்குப்புற வாழ்வு நிலைக்காது போய் கொண்டு புறம் வந்து ஆடிக் களித்திருப்பதுவும் ஆக இருந்த மனிதன் பூரண ஆற்றலைக் கொண்டு இவ்வுலகில் நிலைத்து வாழக் கூடாது போயினான். அன்று அவ்வளவுதான் பெற முடிந்தது. அதுவே திருவுள்ளமாயும் இருந்ததாம்.
இன்றுதான் மனிதன், தனது இயல் உண்மை வடிவமும், அந்தப்பதியின் சிற்றம்பலமாம் ஆலய உண்மையும் ஒன்றே என்பதை அறிந்து, அதனையே சொந்த வாழிடமாகவும் ஆக்கிக் கொண்டு அருளோடு செயல்பட்த் தொடங்கி விட்டுள்ளான். ஆகையால் அவ்வருள் தானே மனிதனுக்கு உயிராகியும் உடலாகியும், எல்லாம் வல்ல சக்தி ஆகியும் விளங்கி நித்தியான்தமாய் வாழ்வும் செய்கின்றாதாம். இன்று தான் மனிதன், ஆண்டவருடைய அந்த உண்மை வாசகத்திற்கு, அருட்பெரும்பொருளைக் கண்டு, அதனையே கொண்டு பெரு மகிழ்விலே என்றும் வாழத்தலைப்படுகின்றான். இவ்வுண்மை செயல்பட்ட, ஒரு முதல் ஆன்மாதான் நம் அடிகளார்.- சரவணான்ந்தா.
நன்றி to சத்திய ஞான கோட்டம், திண்டுக்கல். By ஏபிஜெ அருள்.

saravanananda swamy.jpg
Write a comment