இன்று, 5,2,2023 ஞாயிற்றுக் கிழமை, திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், தைப் பூச நாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தயவு அன்பர்கள் காலை முதலே திரு அருட்பாவிலிருந்தும் தயவுப் பாக்களிலுமிருந்து அருட் பாடல்களைப் பாராயணம் செய்தனர். தைப் பூச நாளான இன்று, சன்மார்க்க அன்பர்களில் பெரும்பாலோர், வடலூருக்கு ஜோதி தரிசனம் காண்பதற்குச் சென்றிருந்தும், பொன்னகரம் தயவு இல்லத்தில், சன்மார்க்க அன்பர்கள் கரூர், மதுரை திண்டுக்கல் மற்றும் பல்வேறு ஊர்களிலுமிருந்து திரளாகக் கலந்து கொண்டனர். சுவாமி அவர்கள் 1967ஆம் ஆண்டு எழுதிய அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை (சுத்த சன்மார்க்கப் பெரு விளக்கம்) முற்பகுதி பிற்பகுதி என்னும் நூல் பிரசுரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத் தலைவர் திரு எஸ்.எஸ்.சிவராம் ஐயா மற்றும், திரு எஸ்.எஸ்.கே.ஆனந்தன் அவர்கள், புத்தகத்தினை வெளியிட்டார்கள். முதல் பிரதியினை, திண்டுக்கல் மூத்த சன்மார்க்க அன்பர்க திரு விசுவநாதனுக்கு, வழங்கினர். தொடர்ந்து, கரூர் மூத்த சன்மார்க்க அன்பர் திரு சிவசாமி அவர்களுக்கும், மதுரை திரு இராமானுஜம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தின் விலை ரூ.120/- என்று இருந்தாலும், இன்று, சலுகை விலையாக ரூ.60/-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தப் புத்தகத்தின் சாரத்தை, ஆசிரியை திருமதி லக்ஷ்மி அவர்கள், சொற்பொழிவாக வழங்கிச் சிறப்பித்தார். அவர்களுக்குப் பின்னர் கரூர் மூத்த சன்மார்க்க அன்பர் திரு சிவசாமி அவர்கள் சன்மார்க்க முறையில் எப்படி வாழ்வது என்பது குறித்து மிக விரிவாக உரையாற்றினார். திரு டொமினிக் பிரிட்டோ அவர்கள், பேருபதேசம் வாசித்தார். அதன் பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

20150405_082857.jpg

20150405_082857.jpg
Write a comment