Vallalar Groups
வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் " - Answers


ஆன்ம லாபம்

எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே - ஆன்ம லாபம்

ஆன்ம உருக்கம்

சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.

ஆன்ம அறிவு

1.இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.
2.
துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது

ஆன்ம உரிமை

ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்.

ஆன்ம இனம்

துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனம் என்றும்

ஆன்ம காரணம்

சாமானியம் ( சாமானிய ஜீவன் )

ஆன்ம காரியம்

விசேடம் ( விசேட ஜீவன் )

ஆன்ம நேயம்

எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல்

ஆன்ம ஒழுக்கம்

யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறாக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்

ஆன்ம திருஸ்டி

ஜீவகாருண்யம் உள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என்று அறியப்படும்

ஆன்ம இயற்கை விளக்கம்

சீவர்கள் தயவு or ஆன்மாக்கள் தயவு

ஆன்ம நேய ஒருமைபாட்டுஉரிமை

உரிமையோடு எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல் - : விளைவு - ஒருமை

ஆன்ம இன்ப வாழ்வு

இம்மையின்ப வாழ்வு, மறுமையின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு

ஆன்ம இன்ப சுகம்

இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.

ஆன்ம வியாபகம்

மனித தேகத்தில் காரிய படுதல்




Endrum Anbudan..