Vallalar Groups
My Enemies - என்னுடைய "விரோதிகள்"
My Enemies - என்னுடைய "விரோதிகள்": ( ராகாதிகள் )

முதலில் "ராகாதிகள்" நீங்கினால் தான் நம்முடைய முதல் திரையாகிய "கரும்பச்சை"
திரை நீங்கும்.
  1. காமம் - உட்பகைவன்
  2. கோபம் - வெங்க்கொடியன்
  3. லோபம் - முழுமூடன்
  4. மோகம் - வீணன்
  5. மதம் - கண்கெட்ட ஆங்காரி
  6. மாச்சரியம்-விழலன்
  7. கொலை - பாதகன்
இவ்வெழுவரும், இவர்களுடைய நண்பர்களும் எனை பற்றிடாமல் "அருள்" செயல் வேண்டும்.

Above 7 persons and thier friends should not attack me..
God , you have to take care me.... I don't know any ways...

Reference:
Vallalar Song: (Arutpa Song NO 6)

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

Selva  V
Great poem by Vallal, which gives good awareness about our enemies.
So we will take this to our real life to get Arutperunjothi Arul.
Thursday, October 16, 2008 at 07:13 am by Selva V