SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் என்ன ஆனார்
வள்ளலாரின் தேகம்  கற்பூரம் போல் கரைந்துவிட்டது என்று வள்ளலார் மறைந்தது எப்படி என்ற  புத்தகத்தில் எழுதி இருக்கிறது. உடம்பு மண்ணில் போட்டு மக்கிப்போனால் என்ன நெருப்பில் இட்டு சாம்பலாய் போனால் என்ன கற்பூரம் போல் கரைந்து போனால் என்ன ஆக உடம்பு அழிந்து போனது என்றுதானே பொருள் அப்படியானால் அதுதான் மரணமிலாப் பெருவாழ்வா?சிலருடைய பாடல்களை ஆதா ரம் காட்டி எழுதப்பட்டு உள்ளது. கர்பூரம் போல் கரைந்து போனவர்களா எழுதி உள்ளார்களா இது ஒரு ஊகம் தானே?1874 ம் ஆண்டு அவர் மறைந்தது கற்பூரம போல் கரைந்ததுதான் என்றால் 1870 ம் ஆண்டே வள்ளலார் மறைந்து போனாரே பிறகு மீண்டும் வந்தாரே அப்போது அவர் உடம்பு கரைந்து போக வில்லையா. ஞான  தேகம் தோன்றியும் தோன்றாமழலும் இருக்கும் என்ற எளிய வாக்கியத்தைக்கூடபுரிந்து கொள்ள முடியவில்லை. வான்செய்து கொண்டது நான் செய்துகொண்டேன் என்ற வரி எதை விளக்குகின்றது. மற்றவையால் காணாதபடி வானம் செய்துகொண்டது. அதை நான் செய்து கொண்டேன் என்று எளிமையாக வள்ளலாரே எழுதியபிறரும் அந்த நிலையை அடையாதவர்கள் எழுதியதை வைத்துக்கொண்டு வள்ளலாரை அப்படிச் சொல்லலாமா. சரி அவர் உடம்பு கரைந்து போனதென்றால் அவர் உடம்பில் இருந்த உயிர் என்ன ஆயிற்று.அதுவும் கரைந்து போகுமா.மாணிக்க வாசக சுவாமிகளும் மற்ற நாயன்மார்களும் மனிதர் அல்லர். தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற்குறித்தவர்கள் பாடியவை அல்ல. (பக்கம் 273  உரைநடை தவத்திரு ஊரன் அடிகளார் பதிப்பு) உண்மை இப்படி இருக்க அவர்கள் எல்லாம் மரணமிலாப் பெருவாழுவு  பெற்றவர்கள் என்று எழுதுவதை எப்படி உண்மை எனக் கொள்ள முடியும்?  சில ஆண்டுகட்கு முன் பேராசிரியர் ராமசாமி புலவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன் .மரணமிலாப் பெருவாழ்வே உண்மை அல்ல என்றார். அப்போது நான் ஆண்டாள் அடையவில்லையா என்று கேட்டேன்.யாரும் அடையவில்லை ஆண்டாள் அவருடைய தந்தை இருவர்  சமாதியும் கள்ளழகர் கோவில் பக்கத்தில் ஒரு மண்டபத்தில் உள்ளது என்றார். வள்ளலார் உடம்பு எப்படி  எந்த வகையில் போனாலும் அவருடைய உயிரானது மறு பிறவி எடுக்கவேண்டும். வள்ளலார் நித்திய தேகம் பெற்றவர்.அவர் தேகத்துடன் இன்றும் இருக்கிறார். காற்றாலே புவியாலே என்ற பாடலில் எதனாலும் அழியாத தேகம் பெற்றேன் என்றார் வள்ளலார்.தேகம் அழிந்தது என்று சொல்லாமல் கற்பூரம் போல் கரைந்துவிட்டது என்றால் என்ன பெருமை. நித்திய தேகம் என்றால் கிடைத்த இந்த தேகத்தையே நித்தியமாக்குவதுதானே.
6 Comments
Jeeva Mano
Ithu oru chitrantha kelvi nanbarey.
Wednesday, January 6, 2016 at 07:10 am by Jeeva Mano
Durai Sathanan
அறிவார் அறிகின்ற வண்ணங்கள் எல்லாம்
அறிகின்ற அவனது ஓர்வண்ணமே ஆதலால்
அறிகின்ற அளவிலே அமர்ந்தாங்கு ஆயுளும்
அடைந்திட அனைவரும் ஏமாந்தனர் அந்தோ!
அருட்பெருஞ்ஜோதி...
Thursday, January 7, 2016 at 03:54 am by Durai Sathanan
Chitrambalam Ramaswamy
Mr Mu.Pa's concept of Vallalar's Gnana degam is correct, HE (Vallalar) can dis appear and re appear whenever he decides to.
Like camphor it's not dematerialisation. Dematerialsation can not materialise back - it's irreversible.
But my question is when HE went into the room of Siddhi Valagam under every body's presence, HE remarked that HE would go inside and if anybody forced to open and see, Arutperunjothi will ensure that the room would remain empty.
That means He decided never to re appear as He used to do earlier? Because thereafter no body
did see HIM. HE decided to be with us as 'Arutperunjothi' and not as a human Vallalar.
Friday, January 8, 2016 at 15:23 pm by Chitrambalam Ramaswamy
Durai Sathanan
உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
Friday, January 8, 2016 at 17:16 pm by Durai Sathanan
Nakinam Sivam
இந்த காணும் உலகம் மாயையின் சம்பந்தத்தால் வந்தது என்பது வள்ளல் பெருமானின் வாக்கு. இதில் அசுத்த மாயை, சுத்த மாயை கடந்தால் மாயத் தோற்றம் மறையும் அது போல தோற்ற உடலும் மறையும். ‘தோற்ற மாமாயை தொடர்பறுத்து’ என்பது வள்ளல் கூற்று. ஆக நாம் தோற்றத்துடன் கூடிய இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு அவரும் நம்மை போலவே மீண்டும் தோற்ற பொருளாக காட்சி தருவார் என்பது நாம் அவர் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை என்பதே பொருள். வான் கலந்து கொண்டேன் என்பது வானத்தின் உருவற்ற தன்மையை பெறேன் என்பதே பொருள். அவர் மீண்டும் தோற்ற பொருளாக காட்சி தர வேண்டும் என்றால் மீண்டும் சுத்த மாயை என்னும் நிலைக்கு கீழிறங்க வேண்டும். ஆனால் பெரும்பொருளை பற்றிய பின்னர் கீழிறங்க வேண்டுமானால் உயிர்களின் மேல் கொண்ட இரக்கத்தினால் மட்டுமே அவர் தோன்றுவார். உரைமனம் கடந்த நிலையில் உள்ளவர் அறிவு என்னும் நிலையிலிருந்து மனம் என்னும் நிலைக்கு இறங்கினால் மட்டுமே சாத்தியம்.
அன்பன்
நக்கினம் சிவம்
Saturday, January 9, 2016 at 03:56 am by Nakinam Sivam
Muthukumaaraswamy Balasubramanian
8.6.1870 அன்று அவர் காணாமல் போனார் என்பது தொ. வே. வடலூரிலிருந்த ஆனந்த நாத ஷண்முக சரணாலய ஸ்வாமிகளுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறிகிறோம்..26.10.1870 அன்று வள்ளலார் வெளியிட்ட அறிக்கையில் நான் சமீபத்தில்தானே வெளிப்படுவேன் அஞ்சவேண்டாம் என்று அறிக்கை விட்ட வள்ளலார் மீண்டும் தோன்றி 18 74 வரை எல்லோரும் காணும்படித்தானிருந்தார். அவருடைய ஞான தேகம் எல்லோருடைய கண்களுக்கும் தோன்றியது,ஆகவே ஞான தேகமென்பது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்ற வள்ளலார் வாக்கை நன்கு புரிந்துகொள்வோமாக, நன்றி,
4 days ago at 09:27 am by Muthukumaaraswamy Balasubramanian