பல ஆயிரக்கணக்கான சமயத்தெய்வங்களைமக்கள் அவைகள் உண்மையாகஇருப்பதாகவேஎண்ணிவழிபாடுசெய்துவருகிறார்கள்.ஜாதி,மதம்,சமயம் எல்லாம் பொய் என்று சொன்ன வள்ளலார் அவற்றில் கூறப்பட்டுள்ள தெய்வங்களும் கற்பனையே தவிர உண்மையில் இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லுகிறார்.எனவே சமயத்தெய்வங்களை வணங்கவேண்டிய அவசியம் இல்லை.வள்ளலார் கூறியுள்ள அருட்பெருஞ்சோதியை வணங்கலாமா என்றால் அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவமே என்றும்கூறியுள்ளார்.தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும்ஓர்அனுபவமாகிய அருட்பெருஞ்சோதிஎன்கிறது அகவல்.அனுபவத்தை அடையவேண்டுமேதவிரவணங்கமுடியாது.வள்ளலார்இறைஅனுபவம்பெற்று இறைவனாகவே இருக்கிறார்.ஆண்டவனும் அவரையே நமக்குத் துணையாக வைத்திருக்கிறான்.நாம் நம்முடைய குறைகள்தீர வணங்கத்தக்கவர் வள்ளலார் வள்ளலாரே
Write a comment