Badhey Venkatesh
உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம்
உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம்
BG Venkatesh / February 6, 2015
உயிர் அனுபவம் – அருள் அனுபவம் – சுத்த சிவ அனுபவம்

1.உயிர் அனுபவம் : ஜீவன் 36 தத்துவத் தொடர்பால், தத்துவத் துரிசுடன் வாழும். ஆணவம் மட்டும் கொண்டு பொது நிலையில் வாழ்வது ஆன்மா.

ஜீவன் 36 தத்துவம் கடந்து ஆன்ம அனுபவம் அடைவது
ஜீவன் அன்மாவாக வாதம் அடைவது

தத்துவத் தொடர்புகள் அறுந்து, தானே தனித்த நிலையில் ஆன்மா நிற்பதும், தானே தன்னை முழுதுமாக உணர்வதும் உயிர் அனுபவம்

இந்த நிலையில் மாயை மற்றும் கன்ம மலங்கள் அற்றுப் போகும்

அதாவது அசுத்த ஜீவனானது – சுத்த ஜீவனாவது – அதாவது சுத்தன் – புனிதன் – புருஷோத்தமன் ஆவது ( வள்ளலார் உரை நடையில் – பேருபதேசம் ஆதாரம் )

2அருள் அனுபவம் : என்பது இறைவனின் அருட்சத்தியுடன் கலந்த அனுபவம்.

ஆன்மாவின் மேல் அருள் – சத்தினிபாதம் பதிந்து ஆன்மா சிவத்திற்கு சமமாதல்
ஆன்மா அருட்சத்தியாக நித்தியன் ஆதல்

ஆன்மாவிற்கும் அருளுக்கும் பந்தம் உண்டாதல் –

ஆன்மாவிற்கும் அருளுக்கும் கலப்பு உண்டாதல் –

3.சிவ அனுபவம் : என்பது

தான் அதுவாதல்

ஆன்மா சிவமாகவே ஆதல்

ஆன்மா சிவானந்தம் பெறுதல்

ஆன்மா சிவத்துடன் அத்துவிதம் ஆதல்

ஆன்மா சிவத்துடன் கலந்து நிறைதல் பூரணமாதல்

வெங்கடேஷ்