அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
அனைவருக்கும் வணக்கம்..
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானுடைய பெருவெளி காக்கும் போராட்டத்தில் நடந்திருக்கக் கூடிய விஷயங்கள் அனைவரும் அறிந்ததே..
பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசாங்கம் முயற்சித்து அதற்கான கட்டுமானப் பணியை ஆரம்பித்தது..
இதனை எதிர்த்து நாம் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் புது டெல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி இன்றைய தேதி வரையில் பெருவெளியில் எந்த விதமான கட்டுமானமும் நடைபெறாமல் பெருமானார் அருளால் தடுத்து நிறுத்தி உள்ளோம்.
தற்சமயம் சைட் B என்கிற இடத்தில் தமிழ்நாடு அரசாங்கம் ஒரு கட்டுமான பணியை செய்து கொண்டிருக்கிறது.
இந்த பணி முடிந்ததற்கு பிறகு நமது சைட் A என்று சொல்ல கூடிய பெருவெளியிலும் கூட தொடங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்விப்படுகிறோம்.
நமது பெருமானின் பெருவெளியில் சர்வதேச மையம் அமைந்தால் என்ன என்று நம்முடைய சன்மார்க்கத்திலேயே சில பேர் அரசாங்கத்துடன் துணை போகிறார்கள் என்ற பேச்சும் பொதுவெளியில் பரவி வருகிறது.
ஆனால் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் பெருவெளியில் எந்த விதமான ஆக்கிரமிப்பும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் வலுவாக இருக்கிறார்கள்.
ஆக்கிரமிப்பு கூடாது என்ற எண்ணம் கொண்ட அனைத்து சன்மார்க்க அன்பர்களையும் இணைத்து நம்முடைய குரலை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் - மற்ற சில விஷயங்களை நாம் பேச வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் ஏற்பாடு ஆகியுள்ளது.
அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த திருவருட் பிரகாச வள்ளல் பெருமானுடைய அருளை பெற்று, இந்தப் பணிக்கு துணை நிற்குமாறு வேண்டுகிறோம்.
செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம்:-
நடேசன் பேலஸ் திருமண மண்டபம்.
வண்டலூர்.
நாள் 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை
காலை (10 மணி முதல் 12. 30 வரை)
அனைத்து சன்மார்க்க நண்பர்களும் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏