DAEIOU - தயவு
22.3.2020 திரு அருட்பா பதிகங்களைப் பாடி..மக்களின் நலன் காக்க வேண்டுவோம்.
    அண்மையில் உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து அறியாதோர் யாருமில்லை. இறவாப் பெருநெறி பற்றி உலகுக்கு எடுத்துரைத்த வள்ளற் பெருமான் வகுத்த திரு அருட்பா பதிகங்களை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், பாடிப்பரவி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி, இந்த வைரஸால், ஆன்மாக்கள் பாதிப்படைவதிலிருந்து தடுப்பதற்கு வேண்டுதல் செய்யும்படி கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 
1432741756728.jpg

1432741756728.jpg

Manohar God path
What you said is correct. We are planning prayers tomorrow. We request all the sanmarka members do the same for the people of World.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து சன்மார்க்க சங்க அன்பர்களுக்கு வந்தனம்.🙏🙏

அன்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் தயவுடன் கேட்பீர்.🧏‍♀️

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தாங்கள் தனித்தாவது,🧍‍♂️ குடும்பத்துடனாவது 👨‍👨‍👧‍👧தீப முன்னிலையில்🔥 இறைவன் ☀இருப்பதாக பாவனை செய்து கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்து நம்மையும் உலக உயிர்களையும் காக்க பிரார்த்தனை செய்வோமாக.🙏

நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டுள்ளபடி தீப முன்னிலையில் அமர்ந்து உலக உயிர்கள் துன்பம் நீங்கி இனித்த வாழ்வருள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பித்தல்

⏰நேரமும் நிகழ்வும்✍️

# காலை 9.30 மணி மகாமந்திரம்
# 9.40 - (1) உலகம் தழைக்க வந்துதித்த உருவே வருக - பாடல்
(2) - பரசிவ வணக்கம் - திருவிளங்க- பாடல்
# 9.45 திருவடிப் புகழ்ச்சி
# 10.00 அருட்பெருஞ்ஜோதி அகவல்
# 11.30 அட்டகம்
# 11.45 இனித்த வாழ்வருள் எனல்-10 பாடல்கள். (6/059) உரத்தவான் அகத்தே உரத்தவா
# 12.00 சத்திய சிறு விண்ணப்பம்.
(எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இது தொடங்கி...)
# 12.05 உலக அமைதிக்காகவும் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறவும் மற்றவர்களுக்கு பறவாமல் பாதுகாக்கவும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பிப்போம்.🙏
# 12.15 மகாமந்திர தியானம்
# 12.25 (1) சுத்த சன்மார்க்க வேண்டுகோள் ( 6/21/1)
அப்பா நான் வேண்டுதல் பாடல்
(2) தனித்திரு அலங்கள்(6/110/55)
குற்றம் புரிதல் எமக்கியல்பே.
# 12.30 ஜோதி பாடல்

----வேண்டுகோள்----

சரியாக காலை 9.00 மணி முதல் 12.30 மணிவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமும் வள்ளல் பெருமானிடமும்
இனித்த வாழ்வருள விண்ணப்பிப்போம்.

எல்லாம் செயல்கூடும்👍👍👍👍👍👍👍👍

வாழி ஒருமையுடன்!🤝 வாழி நீடூழி!!✋🤚
---- வேண்டுகோள் ----
சரியாக காலை 9.00-9.30 தீபம் ஏற்றி அனைவரும் அமர்ந்து விண்ணப்பம் செய்ய தயாராவதற்காண நேரம்.
மிளகு, சீரகம் சேர்த்து காய்ச்சிய தண்ணீரை🥛 அருகில் வைத்துக்கொள்ளவும்.
🍏🍊🍋🍉🍇🍌🍍🥥

பகல் 12.30 -- 12.40 ஜோதி பாடல்

தொடர்ந்து
12.40 -- 1.00 மணிவரை மகாமந்திரம் ஜெபிக்கவும்.
1.00 மணிக்கு முடித்தபிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திவிட்டு சும்மா இருக்கவும்.

பசித்திரு! தனித்திரு! விழித்திரு!

இங்ஙனம்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கங்கள்.
Saturday, March 21, 2020 at 04:16 am by Manohar God path