திரு அருட்பா
தனித்திரு அலங்கல்.
---------------------------------------------------------------------------------------------
                    தனித்திரு அலங்கல்.
---------------------------------------------------------------------------------------------
காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியா லே
கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
------------------------------------------------------------------------------------------------
தற்போது உலகில் நிலவி வரும் சூழ்நிலையில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்தளித்த சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுவோம். அருபெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட் கிரணங்களுக்கு ஆளாகி, இறவாப் பெருநிலையினை அனைவரும் அடைய வேண்டிக் கொள்வோம்.
 
                                vlcsnap-2018-04-03-13h21m08s023.png
 
                                vlcsnap-2018-04-22-19h59m01s761.png
            Write a comment 
        
