DAEIOU - தயவு
14.10.2020 வள்ளலார் சன்மார்க்க அன்பர்கள்..ஜும் மீட்டிங்..
14.10.2020 மாலை 7.00 மணி அளவில் ஜூம் மீட்டிங் நடைபெற்றது. நடத்தியவர் திரு இராமலிங்கம். யு.எஸ்.ஏ. 

பங்கு பெற்று கருத்துப் பரிமாறியவர்கள்.

1) அஜந்தா நாகராஜன்
2) செஞ்சுடர் சிவராமன்
3) பி.வி.வெங்கடேசன்.
4) சாது ஹரி
5) எழுமலை
6) அரூள் மஹேஷ்
7) சண்முகம், ஸ்ரீ ரெங்கம்.
8) அய்யாஸ்.
9) மஞ்சுளா
10) குருமூர்த்தி
11) கிட்டு Fruit
12) மங்கள பிரபு
13) மனோகரன் கந்தசாமி.
14) ரவிக்குமார் (திருக்குறள் மலை உருவாக்குபவர்)
15) சத்தியமூர்த்தி
16) சிவ.நடராஜன்
17) ராமலிங்கம், நெகமம்
18) வினோத் குமார் ராஜு
19) இறையருள்
20) பாபு மாரிமுத்து, ஆஸ்திரேலியா
21) ஆர். சதீஷ்.
22) APJ அருள்.
23) ஞான ஜோதி வள்ளலார்
24) சிவராஜ்
25) கோதண்டபாணி, பாண்டிச்சேரி.
26) பரசுராமன்
27) ராமானுஜம்
28) குமார சிவம்.
29) சக்திவேல்
30) சந்திரசேகரன் நடேசன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், ரூ.500/- கட்டி அங்கத்தினர் ஆனது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. சேலம், திருப்பூர் திருநெல்வேலி  காஞ்சீபுரம் அரியலூர் மாவட்டங்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், அங்கத்தினராகச் சேர்ந்தனர் என விபரம் தெரிவிக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களிலுமிருந்து, இது போன்று, உடனடியாக, அங்கத்தினர் சேர்க்கைத் தொகையினை செலுத்தி, எத்தனை பேர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

      பல்வேறு அன்பர்கள் கலந்துரையாடியதில், ஒரு அன்பர் வள்ளற் பெருமான் இந்த சங்கத்தை ஆரம்பித்த வருடம் 1865. ஆனால், அப்போது, பதிவு செய்து கட்டாயமாக்கப்படவில்லை. 1882ல் தான், இது போன்ற சங்கங்கள், பதிவு செய்யப்பட வேண்டுமென சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முன்பே பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்தப் பத்திரத்தின் ஷரத்துக்களைப் பார்த்து, அதை, இன்றைய தேதிக்கு உள்ள விதிமுறைகளின்படி மாற்றுவதற்கு, ஏற்பாடு செய்ய வேண்டுமெனத் தெரிவித்தார்.

      அங்கத்தினர் தொகை கட்டி ரசீது பெறும் சன்மார்க்க அன்பர்கள், ஒரு படிவத்திலும், தமது பெயர், அஞ்சல் முகவரி, மாவட்டத்தின்பெயர், அலைபேசி எண், போன்ற முக்கியமான விவரங்களை, ஒரு படிவத்திலும் பூர்த்தி செய்து தர வேண்டுமென கல்ந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

      தெய்வ நிலையம், இன்னும் பதிவு பெறாதிருந்தால், அதனைப் பதிவு செய்யக் கோரி, அரசுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டுமென, ஒரு அன்பர் தெரிவித்தார்.

      கலந்தாலோசனைக் கூட்டம் 9.15 மணி அளவில் நிறைவுற்றது.
vlcsnap-2019-01-23-22h11m57s534.png

vlcsnap-2019-01-23-22h11m57s534.png