Vallalar Universal Mission - USA
“சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்”
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
கென்மார்க்க மும்ஒன்றா மே

சன்மார்க்க அன்பர்கள்,
வந்தனம் , வணக்கம்.

வள்ளல் பெருமான் அருளால் இந்த பிப்ரவரி மாதம் முதல் வள்ளலார் யூனிவேர்சல் மிஷன் ஒரு புதிய முயற்சி செய்ய உள்ளது. “சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்” என பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய நிகழ்ச்சி இனி ஒவ்வொரு மாதமும் நடக்கும். இந்த நிகழ்வில் உலகில் பல்வேறு இடங்களில் உள்ள சன்மார்க்க சங்கங்களை அழைத்து அவர்கள் நிகழ்ச்சிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த சங்கம் பற்றிய அறிமுகம், சங்க செயல்பாடுகள், நிர்வாகத்தினர், திரு அருட்பா பாட்டு, பாராயணம் சத்விசாரம், சத்சங்கம், அருள் அனுபவங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். இதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றாகவும் சிறப்பாகவும் செயல் பட வாய்ப்பு அளிக்கும் என நம்புகிறோம். உங்கள் அனைவரின் ஆதரவையும் தரவேண்டுமாய் கேட்டு கொள்கின்றோம்.
நன்றி

www.vallalaruniversalmission.org

Anandha Barathi
சன்மார்க்க சங்கங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நல்ல முயற்சி திருவருள் துணையால் வெற்றியடைய வாழ்த்துக்கள்
Friday, February 16, 2018 at 23:14 pm by Anandha Barathi