SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம் s
சைதாப்பே ட்டை சன்மார்க்க சங்கத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் திரு அருட்பா பாடல்களுக்கு உரை காணுவது வழக்கம்.அனுபவ மாலை உரை ஆரம்ப தினத்தன்று ஓர் அன்பர் புதியதாகச் சங்கத்திற்கு வந்தார்.திரு  அருட்பா ஆறாம் திருமுறை ரூபாய் ஐம்பது கொடுத்து விலைக்கு வாங்கிக்கொள்ளும் வசதி இல்லாதவர்.குறைந்த வருமானம் உள்ளவர்.யாரிடமும் இனாமாகப் பெறவும் அவர் விரும்பவில்லை.எனவே ஒரு பேப்பரில் அனுபவ மாலை முதல் பா டலை எழுதிக்கொண்டு சென்றார் .
அடுத்த வாரம் இரண்டா வது பாடலுக்கு உரை நிகழ்ந்தது.அன்றும் ஒரு பேப்பரில் இரண்டாவது பாடலை எழுதிக் கொண்டு சென்றார்.அந்த வாரக் கடைசியில் ஞாயிறன்று அலுவலகத்தில் அவர் வேலை செய்து கொண்டு இருந்த போது அங்கே தரை சுத்தம் செய்யும்  பெண் வந்து ஐயா கிணற்றில் ஏதோ ஒரு புத்தகம் மிதக்கின்றது பாருங்கள் என்றரர்.இவரும் போய் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த புத்தகத்தை எடுத்தார்hபார்த்தார்.வள்ளலாரின் கருணையை வியந்து கதறி அழுதார்.ஏன் தெரியுமா.கிணற்றில் மிதந்துகொண்டிருந்த புத்தகம் திரு அருட்பா ஆறாம் திருமுறைதான்.அவ்வளவு பெரிய புத்தகம் நீரில் அழுந்தாமல் நீரில் ஏடுகள் நனையாமல் மிதந்தது என்றால் நம்ப முடி கின் றதா                                          .நமது பெருமானாரின்கருணையே கருணை.உன்னால் புத்தகம் வாங்க வசதி இல்லையா.யாரிடமும் இனாமாகப் பெற மானம் தடுக்கிறதா.அந்தப் புத்த கத்தை நான் தந்து உன் குறையைப் போக்குகிறேன் என்று வள்ளலார் தன் இரக்கத்தைக் காட்டினார்.வள்ளலாரை வணங்குவோம் 
Arun Prakash
wow !!! vera level 🙂🙂
Thursday, November 28, 2019 at 03:58 am by Arun Prakash