SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
vallalaar about god

ஒன்றே குல ம் ஒருவனே தேவன் என்பது பழைய மொழி.வள்ளலாரும் இறைவனைப் பற்றி அதே விளக்கம்தான் தருகிறார்
.உருவராகியும் அருவினராகியும் உரு அருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.(1627)

அந்த ஒரு கடவுளைத்தான் இஸ்லாம் அல்லாஹ் என்றும்,கிறித்துவம் பரமபிதா என்றும்,சைவ சமயம் சிவபெருமான் என்றும்,வைணவம் நாராயணன் என்றும் பெயர் வைத்து வழிபட்டு வருகின்றனர்.அந்த கடவுளைத்தான் வள்ளலாரும் அருட்பெருஞ்சோதி என்று அழைத்தார்.அருட்பெருஞ்சோதி என்ற ஒரு தனிக் கடவுள் உண்டா என்ன.இந்தப் பெயர்களில் எல்லாம் தனித்தனியாகக் கடவுள் இல்லை என்பதும் எல்லாப் பெயர்களும் அவன் பெயரே என்பதும்தான் வள்ளலார் வாக்கு.
பெருகிய பேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திருப்பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரண் என்பேன் ஆதி சிவன் என்பேன்
பருகு சதாசிவம் என்பேன் சத்தி சிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே.
அனுபவ மாலை பாடல் எண் 2532)
எல்லோருக்கும் பொதுவாக் எந்தக் கடவுள் உள்ளாரோ அந்தக் கடவுளுக்கு வள்ளலார் இட்ட பெயர்தான் அருட்பெருஞ்சோதி என்பது.அருட்பெருஞ்சோதி என்று ஒரு கடவுள் தனியாக இல்லை.அருட்பெருஞ்சோதி
என்பது அன்றும் இன்றும் என்றும் இருந்த இருக்கின்ற இருக்கப்போகின்ற கடவுளுக்கு வள்ளலார் இட்ட பெயரே என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.இதுவரை குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்ததாக இருப்பதால் வள்ளலார் பொதுவான பெயராக அருட்பெருஞ்சோதி என்று இறைவனை அழைத்தார். வள்ளலார் ஒருபடி மேலே சென்று இந்த அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவமே என்றும் கூறினார்.
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி என்கிறது அகவல்.
இந்த அனுபவமும் மனம் கடந்த ஒரு பெரு வெளி மேல் தான் ஓங்கும் என்கிறார்.
உரை மனம் கடந்த ஒரு பேரு வெளிமேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஜோதி ........அகவல்.
சற்குருமணி மாலையில் உள்ள இரண்டு பாடல்களைக் காண்போம்.

அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே அருட்பெருஞ்சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிளைதனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய்
தஞ்சம் என்ரவர்க்கருள் சத்திய முதலே தனி ஜடராஜ என் சர்குருமணியே (பாடல் எண் 1390)

அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருட்பெருஞ்சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவ நெறிக் கேற்றி எந்தனையே காத்து என துளத்தினில் .கலந்த மெயப்பதியே
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே (பாடல் எண் 1393)
இந்திரியங்களும் காணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவமே அருட்பெருஞ்சோதி.
இதனை நாம் நன்கு புரிந்துகொள்வோமாக.