SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
அருள் தருவதா அல்லது பெறுவதா?
அருள் தருவதா அல்லது பெறுவதா?

ஒரு சாமியார் மக்கள் நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அங்கிருந்த மக்களிடம் காட்டி இது யாருக்கு வேண்டும் என்று கேட்டார். ஒவ்வொருவரும் அவர் நமக்குத் தருவார் என்று எதிர்பார்த்தார்கள்.சிலர் கேட்கலாமா என்று தயங்கினார்கள்.இப்படியே காலம் கழிந்து கொண்டிருந்தது.திடீரென்று ஒரு சிறிய பையன் ஓடிவந்து அவர் கையிலிருந்த அந்த ஆயிரம் ரூபாய் நோட்டைப் பிடுங்கிகொண்டு போய்விட்டான்.அந்தச் சாமியார் சிரித்துக் கொண்டார்.ஐயா இது ஞாயமா என்று அங்கிருந்தவர்கள் கேட்டார்கள். நான் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டைத் தருவதற்குத் தயாராவே இருந்தேன், நீங்கள் அதை என்னிடமிருந்து பெறுவதற்கு என்ன செய்தீர்கள். அந்தக் குழந்தை அவர் தருவதற்குத் தயார்.நாம் எடுத்துக் கொள்வோம் என்று எடுத்துக்கொண்டான் /.அதை என்னிடமிருந்து வாங்க நீங்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லையே என்றார்,.அந்த சாமி யார்தான் கடவுள். ஆயிரம் ரூ பாய் நோட்டுதான் அருள். அந்த நோட்டை பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்யாத கூட்டம்தான் நாம். நோட்டைப் பிடுங்கிச் சென்ற சிறுவன்தான் வள்ளலார்.
அருளுறின் எல்லாம் ஆகும் ஈதுண்மை அருள் பெற முயலுக என்றருளிய சிவமே.

SOULMATE S
இந்த உலக நாடகத்தில், அவரவர்கள் தகுதிக்கேற்ப கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நமது தூல, சூக்கும உடம்பிற்கு ஆற்றலும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், விமானம் போன்றவைகள் அவைகளின் வடிவம், திறன், கட்டமைப்பு போன்றவற்றால் வேறுபாடு அமைகின்றது. அதன்படியே அதன் ஆற்றலும் நிச்சயிக்கப்பட்டது. சைக்கிளை வைத்து பறக்க முடியாது. சமயமத சாதனையை அடைவதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிறது, அப்படி இருக்க சுத்த சன்மார்க்கம் என்பதும், முத்தேக சித்தி என்பதும், அரிதிலும் அரிதாகவே உள்ளது. சமயம் என்ற விமானத்தை வைத்து பூமியை வட்டமடிக்கலாம், ஆனால் அண்டம் விட்டு அண்டம், வெளிக்குள் வெளி கடந்து செல்ல வேண்டுமாகில் பறக்கும் தட்டு போன்ற அதி நவீன கருவி தேவைப்படுவதைபோல, உலக மக்களை சமயத்தில் இருந்து மீட்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால், பூமிக்கு தரையிறங்கப் பெற்றவர் வள்ளலார் என்ற மெய்ஞானி,. அதாவது அந்த கதாப்பாத்திரம் அவருக்கு இறைவனால் வழங்கப்பட்டது, காரணம் அதற்கான இறைநிலை தகுதியை பெற்றிருந்தமையால். ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்புகளை யாரோ ஒரு விஞ்ஞானி கஷ்டபட்டு கண்டுபிடிக்கிறான், அவர் அதற்காக எந்த ஒரு பெரிய தொகையோ, லாபமோ சம்பாதிப்பதும் இல்லை, அவர் அறிவில் ஆண்டவர் தருகின்ற விஷயத்தை வெளிப்படுத்திவிட்டு இவ்வுலக வாழ்வில் இருந்து மறைகின்றனர்...

சுத்த சன்மார்க்கம் இன்னதென்று வித்திட வந்தவர் வள்ளலார், அவர் பெற்ற இன்பத்தை நம்மால் பெற முடியுமா என்றால் முடியும், ஆனால் அது எப்பிறப்பில் வாய்க்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

நாம் செய்ய வேண்டியது, முயற்சி ஒன்றே. இப்பிறப்பில் நம்மில் யாருக்காவது சுத்த தேகம் மட்டும் கிடைத்தாலே பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதைப்பெறுவதற்குண்டான தடைகள் என்ன என்பதை விசாரித்து, விளக்கம் தந்தால், எதிர்காலத்தில் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்து வாழும் அன்பர்களுக்கு ஊன்றுகோலாக அமையும்.

சில நேரங்களில் தோன்றும், இந்த இடத்தில், இந்த காலகட்டத்தில், இப்படி ஒரு அவதாரப்புருஷர் பிறக்க வேண்டும் என்பது கடவுள் செய்த விதியா என்று.
இது உண்மையானால், நாம் செய்யும் முயற்சிகளுக்கு பயன் உண்டா?
Thursday, August 6, 2020 at 02:09 am by SOULMATE S