SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
மரணமிலாப் பெருவாழ்வு.
இராமலிங்க அபயம் துணை
மரணமிலாப் பெருவாழ்வு.
மரணம் என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தால் அந்த உடலை மண்ணில் புதைத்தோ அல்லது நெருப்பில் இட்டோ எரித்து விடுவார்கள்.உடலை விட்டு உயிர் பிரிவதுதான் மரணம்.
உடலை விட்டு உயிரானது பிரியாமல் என்றும் உடம்போடு வாழ்வதே மரணமிலாப் பெருவாழ்வு ஆகும்.

வள்ளலார் அடைந்தாரா?
அவர் அடைந்தார்.அதை அவரே பல பாடல்களில் வெளிப்பைடுத்தி இருக்கிறார்.
வாழி என்தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணமிலாப் பெருவரம் நான் பெற்றுக்கொண்டேன்......
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வர,ம் எனைப்போல் சார்ந்தவரும்
தேவா நின் பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார் உளர் நீ சற்றே அறை.

அப்படியானால் அவர் உடல் என்ன ஆயிற்று?
வள்ளலாரின் தூல தேகமானது சுத்த தேகம் ,பிரணவ தேகம், ஞான தேகம் ஆகிய முத்தேக சித்தியைப் பெற்றது.
சுத்த தேகத்தின் தன்மை;
மலஜலம் ,வியர்வை,துர்நாற்றம்,நிழல் முதலியவை இருக்காது தோன்றும் பிடிபடும். ஒன்பது முறை போட்டோ எடுத்தும் அவரது தேகம் போட்டோவில் விழாததால் அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டது.
அடுத்து பிரணவ தேகம். இது தோன்றும் ஆனால் பிடிபடாது.
முடிவாக ஞான தேகம் இது. தோன்றியும் தோன்றாமலும் இருக்கும்.
30-1-1874 அன்று மேட்டுக்குப்பம் அறைக்குள் நுழைந்த போது அங்கிருந்தவர்களிடம் வள்ளலார் பேசினார். அச்சமயம் அவர் தேகம் எல்லோருடைய கண்களுக்கும் தெரிந்தது. பின்னர் அரசாங்கத்தார் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தோன்றவில்லை. அதற்கு முன்பே பலமுறை வள்ளலார் மறைந்து மறைந்து வெளிப்பட்டு இருக்கிறார். வள்ளலார்ன் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அடையாறு பிரம்ம ஞான சங்கத்தவருக்கு அளித்த
வாக்கு மூலத்தில் எங்கள் குருநாதர் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் அடிக்கடி மறைந்து விடுவதுண்டு என்றும் அந்த நேரங்களில் அவர் எங்கு போனார் என்ன ஆனார் என்பது எவருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
எனவே இன்றும் அவர் தன் தேகத்தோடு இருக்கின்றார்.
இதற்கும் அவருடைய பாடலே சான்றாக உள்ளது.
பஞ்ச பூதங்களில் மண்,நீர்,நெருப்பு ஆகியவை பார்க்க முடிகிறது. காற்று உணர முடிகிறது.ஆனால் ஆகாயம் கண்ணால் பார்க்க முடியவில்லை.ஆகாயம் மற்றவர்களால் காண முடியாமல் தன்னைச் செய்து கொண்டது.
மன் செய்து கொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டது நான் செய்துகொண்டேன். என்ற பாடலில் தான் என்ன செய்துகொண்டேன் என்று அவரே கூறியுள்ளார்.
வான் என்ன செய்துகொண்டது?
மானாகி மோகினாய் விந்துவாகி மற்றவையால் காணாத வானமாகி .........(மகாதேவ மாலை பாடல்)
மற்றவர்கள் தன்னைக் காணாதவாறு வான் செய்துகொண்டது. வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன்.அதாவது மாற்றார்கள் காணாதவாறு என்னை நான் செய்துகொண்டேன். இது அவர் வாக்கு.
இந்த நிலையை வள்ளலார் எப்படி அடைந்தார்.?
தான் செய்த தவத்தால் தான் அடைந்தார்.
நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு

சுற்றது மற்றவ்வழி மா சூதது என்று எண்ணாத்
தொண்டரெலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார்
எற்ற தும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய
துரையே நின்னருளால் நான்
கற்றது நின்னிடத்தே கேட்டது நின்னிடத்தே பின் கண்டது
நின்னிடத்தே உண்டதும் நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றதும் நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே.

என்சாமி எனது துரை என்னுயிர் நாயகனார் இன்று
வந்து நானிருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே என் பேருடம்பில்
கலந்துளத்தே என்றும் பிரியாமல் இருப்பார்.
தன் ஜாதி உடைய பெரும் தவத்தாலே நான் தான்
சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே
மின் சாரும் இடைமடவாய் என் மொழி நின்றனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்தபோதே.
நமக்கு அவர் சொல்வது என்ன?
ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் பிரமன் ஆயுசுதான் பெறமுடியும் பாச வைராக்யத்தால் விஷ்ணு ஆயுசும்,ஈஸ்வர பக்தியால் ருத்ரன் ஆயுசும் பிரம்ம ஞானத்தால் என்றும் அழியாத ஸ்வர்ண தேகமும் பெறலாம்.
இறுதியாக வள்ளலார் மக்களுக்கு தீபத்தை வெளியே வைத்து எடுத்துக் காட்டியது ஞான சரியை பாடல்கள் தான். அவை அனைத்தும் தவத்திற்குரிய பாடல்களே ஆகும். உதாரணத்திற்கு முதல் பாடல் மட்டும் இங்கே காட்டப்படுகிறது;
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே
என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே.
நம் உடம்பில் பொற்சபை சிற்சபை எது என்று அறிந்து அதனில்
மனதைப் புகுத்தினால் மரணத்தை வெல்லலாம்.
முதலில் நாம் தகுந்த ஆச்சாரியனைக் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்து கொள்ள வேண்டும். இது வள்ளலார் வாக்கு.