SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ஐந்து திருமுறைகளா ஆறு திருமுறையா
ஐந்து திருமுறைகளா ஆறு திருமுறையா

நாம் புரிந்து கொள்ளவேண்டும். 1867 ம் ஆண்டில் திரு அருட்பாவை அச்சிடத் தொடங்கியசமயம் அந்தப் பாடல்களை ஆறு திருமுறை களாகவே பிரித்தார்கள். வள்ளலார்தான் முதல் நான்கு திருமுறைகள் மட்டும் வெளி வந்தால் போதும் என்று கட்டளை இட்டார்கள். அதன்படி முதல் நான்கு திருமுறைகள் மட்டும் முதலில் வெளி வந்தன.ஐந்து திருமுறைகள் வேலாயுத முதலியாரால் பின்பு வெளியிடப்பட்டது. அச்சிடாமல் வைத்திருந்த ஆறாம் திருமுறைப் பாடல்களுடன் பிறகு எழுதிய பாடல்களையும் சேர்த்து ஆறாம் திருமுறையாகப் பின்னர் வெளியிடப்பட்டது. வள்ளலார் மக்கள் முதலில் ஒழுக்கத்திற்கு வரவேண்டும் என்று எண்ணி இருக்கவேண்டும். அதனால்தான் முதல் நான்கு திருமுறைகள் மட்டும் வெளியிட அனுமதி தந்தார். அந்தத் திருமுறைகளில் கொட்டி வைத்துள்ள ஒழுக்கங்கள் அனைத்தையும் நாம் கொண்டுவிட்டோமா? புராணக் கதைகள் வேண்டாம். ஒழுக்கங்களுக்காகவாவது அந்தத் திருமுறைகள் வேண்டும்.
புராணக் கதைகளின் விளக்கங்களைத் தருவதை ஒரு குறைபாடாகச் சுத்த சன்மார்கிகள் எழுதுகிறார்கள். உரை நடையைப் பாருங்கள் .புராணங்களுக்கு வள்ளலார் கொடுத்துள்ள விளக்கங்கள் எவ்வளவு.நன்கு படித்தவர்கள் கூட புராணங்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை உண்மையில் நடந்தவைகளாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்தக் கற்பனைகளை விளக்கி இவை எல்லாம் உண்மையில் நடந்தவை அல்ல என்று விளக்கினால் மட்டுமே மக்களை அவற்றிலிருந்து வெளியே கொண்டுவரமுடியும்.ராமாயணம்.பாரதம் போன்ற கதைகளை ஆண்டுதோறும் ஒவ்வொரு கிராமத்திலும் பிரசங்கமாகக் கேட்டுமகிழும் கிராம மக்களுக்கு அவைபொய்யே விளக்கம் கொதுத்தால் மட்டுமே அவற்றை விட்டு விலகுவார்கள். எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்க நம்மால் முடியுமா ? அதற்கெல்லாம் நமக்குக் காலம் உள்ளதா என்று கேட்கிறார்கள். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள்.ஒன்றை சொல்லி மற்றவையும் இதுபோல்தான் என்று சொல்லலாமே.சமய மதங்களில் மூழ்கி உள்ளவர்கட்கு விளக்கம் கொடுத்தால் மட்டுமே அதிலிருந்து அவர்கள் வெளியேறச் சிறிதாவது வாய்ப்பு உண்டு.ஓர் விளக்கமும் தராமல் அவை எல்லாம் பொய் பொய்யே என்று சொல்லிக்கொண்டிருந்தால் நமது பேச்சை அவர்கள் செவி மடுக்கவே மாட்டார்கள்.
வள்ளலார் சமயத்தெய்வங்களை எந்த வயதிலும் நம்பவில்லை. வள்ளலாரின் விண்ணப்பங்கள் தெளிவாகக் காட்டுகின்ற அவைகளைப் படித்தும் வள்ளலார் ஆரம்பத்தில் சமயம் சார்ந்தே இருந்தார் என்பது நாம் அவரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது.
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்றென்றே எண்ணியதல்லால் சச்சிதானந்தத்து இறையும் நான் வேறு எண்ணியதுண்டோ என்ற ஒரு பாடல் போதாதா. ஜாதியும்,மதமும்,சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி என்ற அகவல் வரிக்கு என்ன பொருள். அவர் முன்பே உணரவில்லை பின்னால்தான் உணர்ந்தார் என்று பொருளா. வள்ளலாரையும் குறை சொல்லாமல் இருப்போம். வள்ளலார் பிறவி ஞானி. யாராலும் ஓதப்பட்டு உணர்ந்தவர் அல்ல அவர். பாணி நீயம் போன்ற இலக்கண நூல்களைக் கூட சிறு வயதிலேயே மனப்பாடமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார் என்பதை நாம் அசட்டை செய்யவேண்டாம்.
சமயத்தில் உள்ள எந்தப் பெரியவர்களும் சமயத் தலைவர்களைக் குறை கூறுவதில்லை. சன்மார்கத்தில் மட்டுமே வள்ளலார் பெயரையும் சொல்வோம் அவருக்கு ஆரம்பத்தில் ...........அறிவு என்றும் சொல்வோம்.யாரை நாம் குறை சொல்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்.இவ்வாறு சொல்லிவிட்டு மற்றவர்களிடம் சன்மார்கத்தை நாம் எப்படிப் பரப்ப முடியும்.சமயத் தெய்வங்களை வள்ளலார் பாடியதனால்தான் சமயத்தில் இருந்து பெரும்பான்மையினர் இன்று சன்மார்கத்திற்கு வந்துள்ளானர். ஓர் ஆய்வு செய்து பாருங்கள் .இன்று சன்மார்கத்தில் உள்ளவர்கள் அநேகமாக முன்பு சைவ சமயத்தில்தான் இருந்திருக்கின்றார்கள். சிலர் கடவுள் எதிர்ப்புக் கட்சியில் இருந்தவர்கள். சில பாடல்கள் அவர்கள் கருத்துக்கு ஒத்து இருந்ததால் அவர்களும் இங்கே வந்திருக்கின்றார்கள். அவர்கள் சீர்திருத்தக் கருத்துக்களை மட்டுமே ஏற்பார்கள்.
வள்ளலார் தன் உடம்புடன் இன்றும் இருக்கின்றார் என்பதை உலக மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.மரணமிலாப் பெரு வாழ்வு என்பது உடம்பை விட்டு உயிர் பிரியாமல் இருப்பதே தவிர வேறொன்றல்ல. என் தேகம் எதனாலும் அழியாது என்ற வள்ளலார் வாக்கை நம்புவோம். அவர் பெற்ற ஞான தேகம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும்.அவர் பலமுறை மறைந்து மறைந்து தோன்றி னார் என்பதை உணர்வோம். அவர் மீண்டும் வருவார். வருவேன் என்றுதான் சொல்லிச்சென்றுள்ளார். ஜீவ ஒழுக்கத்தில் அனைத்து தேச மக்களையும் வேறுபாடு எதுவும் இல்லாமல் எல்லோரும் சகோதரராக வாழவேண்டும் என்று சொன்னார். ஆனால் சன்மார்கத்திலேயே நாம் அனைவரும் கருத்து மாறுபாடு கொண்டு பலப் பலப் பிரிவினராக இருப்பதோடல்லாமல் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கியே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே இன்றைய உண்மை நிலை. கருத்து மாறுபாடு் பேசுவோம். பேசிக்கொண்டே இருப்போம்.முடிவு காணுவோம் சகோதர ோதர உரிமை இல்லாமல் போகக் கூடாது அல்லவா. அமைதியாக வேகம் இல்லாமல் பேசுவோம். வாருங்கள். லிகிதச் சண்டை வேண்டாம் என்றால் நேரில் பேசுவோம்.