Vallalar Universal Mission Trust   ramnad......
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
 இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே.
MANOHAR KADAVUL PAATHAI - 9841450782
good poet in thiruarutpa
thanks brother
Saturday, February 20, 2021 at 05:17 am by MANOHAR KADAVUL PAATHAI - 9841450782