ஒழிவிலொடுக்கம் (ஒழிவில் ஒடுக்கம்) நூல் ஒரு விரிவான அறிமுகம்
(அமெரிக்க வள்ளலார் யுனிவர்சன் மிஷன் நிகழ்வில் ஆற்றிய உரை)
உரை: திரு. ஆனந்தபாரதி, திருமுதுகுன்றம்
ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,
ஒழிவிலொடுக்கம் காழிக்கண்ணுடைய வள்ளல் அவர்களால் எழுதப்பெற்ற ஒரு சிறந்த ஞான நூல், அதற்கு உரை செய்தவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள், இன்னூலின் அருட்சிறப்புக் கருதி நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் பதிப்பித்தார்கள்.
அதனோடு, நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளுக்கு ஒரு விருத்தி உரையும், சிதம்பர சுவாமிகள் உரையில் காணும் அருஞ்சொற்களுக்கு உரிய பொருளும், நூலின் ஆங்காங்கே சில அடிக்குறிப்புகளும், நூல் இறுதியில் அமைத்துக் கொள்ளல் என்ற பெயரில் சில குறிப்புகளும் எழுதி 1851 ஆம் ஆண்டு சிதம்பர சுவாமிகள் உரையுடன் நமது பெருமானார் வெளியிட்டார்கள்.
இந்த நூலின் பாயிரத்துக்கு வள்ளல் பெருமான் செய்த விருத்தி உரையில் பல முக்கியமான அருள் நெறிக் குறிப்புகள் காணப்படுகின்ற, அதனயும், ஒழிவிலொடுக்க நூலினையும் அன்பர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு பேசப்பட்ட ஒரு விரிவான அறிமுகமே இந்த உரை,
ஒழிவிலொடுக்க பாயிர விருத்தியையும், நூல் முழுவதையும் அன்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், அதற்கு ஓர் தூண்டுகோலே இந்த சொற்பொழிவு.
மெய்ஞான அன்பர்கள் இவ்வுரையினைக்கேட்டும் நூலின் பெருமையை அறிந்தும், உணர்ந்து பயன் பெருக!
நன்றி.
4 Comments
Best Regards
Narayanamoorthy
https://www.vallalar.org/Tamil/V000009446B