Program Guide Download :
{DownloadRefr:3485}
ஸ்ரீ லங்கா (இலங்கை) சாவகச்சேரி, வேம்பிராயில் சத்திய தருமச் சாலையும், சத்திய ஞான கோட்டமும் திறப்பு
http://www.vallalarfiles.com/image/eoK0OsGUjQZdpmtx5aCfNA,$,3d,$,3d/sz-tn650/SrilankaGn67440000.jpg
http://www.vallalarfiles.com/image/CqE,$,2feOKGG4BufpGJlPuOTg,$,3d,$,3d/sz-tn650/srilankasa69340000.jpg
விழா குறித்த விபரம்.
நடைபெறும் நாள் …. 2010ஆம் ஆண்டு ஆவனி மாதப் பூச நாள்.
ஸ்ரீ லங்கா (இலங்கை) யாழ்ப்பாணம் மாவட்டத்தை அடுத்த சாவகச்சேரியில் உள்ள வேம்பிராய் கிராமத்தில் சத்திய தருமச் சாலை திறப்பு விழாவும், பின்னர் 2010ம் ஆண்டு, ஆவணி மாதப் பூச நாளில், சத்திய ஞான கோட்டமும் திறக்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது.
{}
29.6.2010 செவ்வாய் |
மேட்டுக் குப்பத்தில் சித்தி வளாகத் திருமாளிகைக்குப் பின்புறம், திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்களுக்குச் சொந்தமான கட்டிடத்தில், இலங்கை சாவகச் சேரிக்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடியின் முன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) திரு அருட்பா முற்றோதல் நடைபெற உள்ளது. |
15.8.2010 ஞாயிறு |
திரு நிலைக் கண்ணாடி வழிபாடு நிறைவுபெறல். |
16.8.2010 திங்கள் |
திரு நிலைக் கண்ணாடியுடன், மருதூர், கருங்குழி, தீஞ்சுவை நீரோடை, மேட்டுக்குப்பம், வடலூர் சத்திய தருமச் சாலை, வடலூர் சத்திய ஞான சபை ஆகியவற்றில் வழிபாடு செய்து சுற்றி வரல் |
17.8.2010 செவ்வாய் |
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருநிலைக் கண்ணாடியுடன் கொழும்பு வந்தடைதல். திரிகோணமலை சென்று பின்னர் திருக்கோணேஸ்வரத்தில் வழிபாடு செய்தல் |
18.8.2010 புதன் |
மன்னார் சென்று திருக்கேத்தீஸ்வரத்தில் வழிபாடு செய்தல். இரவு – சாவகச்சேரி வந்தடைதல் |
19.8.2010 வியாழன் |
ஜீவ காருண்யம், உயிரிரக்கம் பற்றி 3 இடங்களில் ஊர்வலம் நடத்துதல். யாழ்ப்பாணம்-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் துவங்குதல்..உயிரிரக்கத்தை வலியுறுத்தி இவ்வூர்வலம் நடைபெறும். இந்து சமயப் பேரவையில் துவங்கி, சிவதொண்டன் நிலையத்தில் நிறைவடைதல். |
20.8.2010 வெள்ளி |
அளவெட்டி-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் கேணிக்கரை-வைரவர் கோயிலில் ஆரம்பித்து கும்பிளாவளை பிள்ளையார் கோவிலில் நிறைவடைதல். இரவு – செல்வச் சன்னிதி அடைந்து திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தல். |
21.8.2010 சனி |
சாவகச்சேரி..- ஊர்வலம் சிவன் கோவிலில் ஆரம்பித்து வேம்பிராய் பூத விராயர் கோயிலில் நிறைவடைதல். |
22.8.2010 ஞாயிறு |
வேம்பிராய்- காலை – குருவணக்கம். எல்லாம் வல்ல அருட்தந்தை இராமலிங்கப் பெருமானை சிங்காதனத்தில் வைத்து..வணங்குதல். திரு அருட்பா பாராயணம் மற்றும் வழிபாடு செய்தல் |
23.8.2010 திங்கள் |
வேம்பிராய்-சத்திய தர்மச்சாலை திறப்பு விழா. |
24.8.2010 செவ்வாய் |
சத்திய ஞான கோட்டத்தின் திருக்கதவம் திறப்பு விழா திறந்த பின் ஜோதி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலவறை வழிபாடு..நாள் ஒன்றுக்கு 6 முறை என்ற வீதத்தில் 8 நாட்கள் வழிபாடு 48 முறை நடைபெறல். |
31.8.2010 செவ்வாய் |
நிலவறை வழிபாடு நிறைவு செய்தல் இரவு 8 மணிக்கு-யந்திரப் பிரதிஷ்டை செய்தல் |
1.9.2010 புதன் |
காலை 5.00 மணிக்கு திருநிலைக் கண்ணாடி வழிபாடு செய்து ஜோதி பீடத்தில் பொருத்துதல். பகல் 12 மணிக்கு ஜோதி பீடம், சிற்சபை, பொற்சபை ஆகியவற்றிற்கு நீராட்டி முடிவைத்தல். |
2.9.2010 வியாழன் முதல் 5.9.2010 ஞாயிறு வரை |
சத்திய ஞான கோட்டத்தில் உள்ளேயிருந்து வழிபாடு செய்தல். திரு அருட்பா பாராயணம் செய்தல். |
6.9.2010 திங்கள் |
அதிகாலை 2.00 மணிக்கு-விண்ணப்பங்கள் செலுத்துதல். காலை 5.00 மணி அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல் காலை 6.00 மணி – ஜோதி வழிபாடு துவக்கம். 7 திரைகளை நீக்கி ஜாதி மத வேறுபாடின்றி ஜோதி தரிசனம் காண்பித்தல். காலை 10 மணி மதியம் 1 மணி மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கு-வடலூரில் சத்திய ஞான சபையில் திரை நீக்கி 6 முறை அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிப்பது போன்று காண்பித்தல். ஒரு புறம் ஜோதி தரிசனம் காண்பித்தல் மறு புறம் விசேட நிகழ்ச்சிகள்… சொற்பொழிவு..வள்ளலார் வரலாற்று நாடகம் திரு அருட்பா நடனம் மழையூர் சதாசிவம் திரு அருட்பா இசைக் கச்சேரி..முதலானவை மறுநாள் (7.9.2010) காலை 6.00 மணி வரை நடைபெறும் |
7.9.2010 செவ்வாய் |
காலை 6.00 மணி - ஜோதி தரிசனம் காண்பித்தல்.மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை-கெளரவிப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மழையூர் சதாசிவம் திரு அருட்பா கச்சேரி நடைபெறும்.. அதன் பின் நிறைவு விழா. இறை வணக்கம். |
இந்த வைபவம் முடிவடைந்த பின்னர். வடலூரில் சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதப் பூசத்தின் போதும் 6 திரை நீக்கி ஜோதி வழிபாடு காண்பிப்பதைப் போன்றே. வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திலும் அருட்பெருஞ் ஜோதி வழிபாடு நடைபெறும்.
இங்ஙனம்,
தயவுத்திரு ஈஸ்வரன் – 0094773068974
0094776155930
http://www.vallalarfiles.com/image/kc7VZ2qfcTy4pqbbFfSOzA,$,3d,$,3d/sz-tn650/savagacher69720000.jpg
http://www.vallalarfiles.com/image/3v6jYf7qmMMpj2TypKGZBg,$,3d,$,3d/sz-tn650/savagacher69740000.jpg
http://www.vallalarfiles.com/image/Ny2EW3842V80j,$,2boe,$,2fAmEOA,$,3d,$,3d/sz-tn650/savagacher69760000.jpg