இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மீசாலை வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், இன்று, 5.2.2023 தைப்பூச நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தற்போது இலங்கையில் நிலவி வரும் நிதி நெருக்கடியான சூழ் நிலையிலும், இந்த சத்திய ஞான கோட்டத்தில், இந்த விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை, திரு கேதீஸ்வரன் அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி, அவரது மகன் செல்வன் தயாநந்தன் ஆகியோர், செய்திருந்தனர். ரூ.2,500/- மதிப்பில் 20 பொதிகள் (அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான அனைத்தும் சேர்ந்த பொட்டலம்) மீசாலை வடக்கினை அடுத்த கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வருவோருக்கு, வழங்கப்பட்டது.

20150119_184350.jpg
Write a comment