இலங்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளது, சாவகச்சேரி நகராட்சி. அதன் அருகில், மீசாலை வடக்கு என்ற பகுதியில், கடந்த 2010ஆம் ஆண்டில், சத்திய ஞான கோட்டம் கட்டியவர் திரு கேதீஸ்வரன் ஆவார். அவர், அவரது மனைவி திருமதி விஜிலக்ஷ்மி மற்றும் அவரது மகன் த்யானந்தன் ஆகியோர் அனைவரும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆசி பெற்றவர்கள். திரு கேதீஸ்வரன், 20.3.2023 அன்று, யாழ்ப்பாணம் அருகே உள்ள, பலாலி விமான நிலையத்திலிருந்து ,சென்னைக்கு மதியம் 3.00 மணி அளவில் வந்து சேர்ந்து விட்டார். அங்கிருந்து, இன்று 20.3.2023 இரவு கிளம்பி, மதுரைக்கு, 21.3.2023 அன்று வந்து சேர்கின்றார். 26.3.2023 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் நடைபெற்வுள்ள சுவாமிகளின் குருபூஜை விழாவில், மரணமில்லாப் பெருவாழ்வு என்ற தலைப்பில், அவர் சொற்பொழிவாற்றவுள்ளார். சுத்த சன்மார்க்கத்தின் பால் தீவிர ஈடுபாடு கொண்ட திரு கேதீஸ்வரன் அவர்களின் வருகை, மற்றும் குருபூஜையில் அவரது பங்கேற்பு ஆகியவை, சன்மார்க்க அன்பர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படவுள்ள ஒன்றாகும்.

20150405_082857.jpg
Write a comment