Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
ஜீவகாருண்யத்தைப் பற்றி வள்ளற்பெருமான் கூறுவதை சற்று விளக்கிக் கூறவும்?

அறிவார்ந்த ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என வள்ளற்பெருமான் கூறியுள்ளார். கொலை புலை தவிர்த்து, சாதி சமய வழக்குகளில் சிக்காமல் வாழ்ந்து, நமது வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்து கொண்டு ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு, அவர்களின் பசி தீர்க்க உணவு அளிக்கவேண்டும்.

இதில் ஆடம்பரமோ, விளம்பர எண்ணமோ இல்லாது அவரவர் சக்திக்கு ஏற்ப இந்த ஜீவகாருண்யத்தை செய்யவேண்டும். இதுவே உண்மையான ஜீவகாருண்யமாகும்.

ஜீவகாருண்யத்தின் உண்மையான பலனாக வள்ளற்பெருமான் கூறுவது (1) ஊழ்வினைகளால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடலாம். ஜீவகாருண்யத்தை விரதமாகக் கொண்டு வாழும் இல்லறத்தார்கள் என்றும் அழியாத ஜீவமுக்தி நிலையை அடைவர் என வள்ளலார் உறுதிபடக் கூறுகிறார். ஜீவகாருண்யத்தை அவ்வப்பொழுது செய்துவரும் இல்லறத்தார்கள் நல்ல ஆரோக்கியமான அறிவுமிக்க சந்ததியைப் பெறுவர். திருமணத்தடை நீங்கி நல்ல வளமான வாழ்வு பெறுவர். சிறந்த தொழில்வளம் பெற்று வாழ்வர். எவ்வளவு கடுமையான நோய்கள் இருந்தாலும் அவை நீங்கி நலம் பெறலாம். இன்று சன்மார்க்கத்தில் உள்ள அனைவரும் இதுபோன்ற அனுபவ நிலைகளை அடைந்துள்ளனர். இதற்கு மேலும் நமக்கு சமய வழிபாடு தேவையா?

ஜீவகாருண்யம் உண்மையாகச் செய்பவர் தியானம், தவம், யோகம், ஞானம் போன்ற எந்தவித முயற்சியும் இல்லாதபடியே மேற்கண்ட பயன்களை அடையமுடியும் என்பதை வள்ளற்பெருமான் கூறியுள்ளதை கவனத்தில் கொண்டு வாழவேண்டும். அப்பொழுதுதான் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத்துவத்தை நம்மைச் சுற்றி வாழும் மக்கள் உணர இயலும்.

mail2jagadees
Its very nice concept about serving to poor peoples...
Serve to the poor people is direct wishing the GOD'S..
Aruperunjothi,thaniperun karunai!!!
By,
Jagadeeswaran D,
Thiruppachethi
Monday, April 5, 2010 at 05:24 am by mail2jagadees