அருட்பெருஞ்ஜோதி                                                                              அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                                                                             அருட்பெருஞ்ஜோதி!
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளலார் வருகை
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதி என்
றரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூடிய பல்சமயக்
கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்
காட்சிகளும் காட்சி தரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையொட்டென நன் கறிவித்திங் கெனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளறிய மெய் அடியார் போற்ற மணி மன்றில்
தனி நடஞ்செய் அரசே என் சாற்றும் அணிந்தருளே.
-       திருவருட்பா/அருள் விளக்க மாலை
 
 
பேரன்புமிக்க ஆன்மநேயச் சகோதர, சகோதரிகளே. அடியேனின் வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உலகலாவிய அளவில் நமது அருட்தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கக் கொள்கை பரவ வேண்டும் என்ற உயர்ந்த எழுச்சிமிகுந்த மேலான எண்ணத்தால் நமது அருமைச் சகோதரர் அருட்திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் பெருமுயற்சி செய்து இந்த கணினி மூலம் உலகிற்கு சன்மார்க்கச் செய்தியை தர முனைந்து திறம்பட செயலாற்றி வருகிறார். அவர் எடுத்த முயற்சி வெற்றிபெற அடியேனும், இந்த கணினி ஒளிபரப்பின் மூலம் உங்களிடம் சன்மார்க்கக் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
 
செயல் எல்லாம் இறைவனின் திருவருளால் நிறைவாக நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவடிகளிலும், “சத்குரு வள்ளற்பெருமானின்” திருவடிகளையும் வணங்கி துவங்குவோம்.
 
முதலில் அடியேன் கி. சத்தியமூர்த்தி இந்த இதழின் ஆசிரியர் என்ற முறையில், இதழ் பற்றிய சுருக்கமான சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
2001 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தில், ஐ. சி. எப். என்ற பகுதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய சன்மார்க்க மாநாடு ஒன்று, தலைமைச் சங்கம் – வடலூர் என்ற அமைப்பின் மூலமாக நடத்தப்பட்டது. அப்பொழுது சன்மார்க்க சங்கங்களின் செயல்பாட்டை எந்தவித கட்டணமும் இல்லாது வெளியிட வேண்டும் என்ற அவா அடியேன் சிந்தையில் தோன்ற, இது குறித்து ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சன்மார்க்க இதழ்களின் ஆசிரியரை அணுகிக் கேட்டதில், அவர்கள் யாரும் சங்கச் செய்திகளை வெளியிட முன்வரவில்லை.
 
இந்தச் சூழலில்தான் அடியேனின் சிந்தனையில் வள்ளற்பெருமானின் தூண்டுதலால் இந்த “வள்ளலார் வருகை” என்ற மாத இதழை துவங்கும் வாய்ப்பு உருவானது. முதல் அறிமுக இதழ் சற்று அவசரமாக அச்சடிக்கப்பட்டு 2001, 20, 21 ஜனவரியில் நடந்த ‘சன்மார்க்க மாநாட்டில்’ இலவசமாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு மூன்று மாதங்களில் முறையாக, மாத இதழாக ஆண்டு சந்தா ரூ 25/- பிறகு ரூ 30/- ரூ 40/- என்ற நிலையில் 2007 ஆம் ஆண்டு வரை இறைவனின் திருவருளால் நடைபெற்றது.
 
2005 ம் ஆண்டு வரை அடியேனின் முயற்சியில் வரும் சந்தா தொகையைக் கொண்டும், அடியேனின் பங்காக மீதித் தொகை செலவு செய்தும் நடத்தி வந்தோம். நிறைந்த அன்பர்கள் சந்தா தருவதில்லை. நானும் எவரிடமும் சென்று சந்தா பற்றி வற்புறுத்தி கேட்பதில்லை. இந்தத் சூழலில் கையிழப்பு அதிகமாகவே இதழ் மாத இதழாக தொடர்வதை நிறுத்தி, வருடம் இருமுறை இலவச இதழாக வெளியிட முடிவு செய்தேன். இந்தச் சூழலில் நமது அன்புச் சகோதரர் அருட்திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் அடியேனுடன் தொடர்பு கொண்டு, இதழை கணினி ஒளிபரப்பின் மூலம் தொடரலாம் என்று கூறியதன் பேரில் இதழ் தற்போது தொடர்கிறது, என்பதை பணிவுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அடியேன் பற்றிய விபரங்கள்: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வாழ்ந்த காலத்தில் 1990 ஆம் ஆண்டு அருள்மிகு சர்வசித்தி விநாயகர் ஆலயத்தில் பொருளாளராக பணியாற்றிய பொழுது, வள்ளற் பெருமான் இயற்றிய திருஅருட்பா ஓதுதல். அந்த ஆலயத்தில் அமரர் தவத்திரு புருசோத்தம பாகவதர் என்ற சான்றோர் பெருமகனும், மற்ற அன்பர்களும் சேர்ந்து ஓதுவார்கள். அடியேன் ஆலய நிர்வாகத்தில் இருந்ததால் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
 
என்னை அறியாமல், திருவருட்பா படிக்க ஆர்வம் வந்தது. அதன் பிறகு தான் “சன்மார்க்கம் சார்ந்தால்” அசைவ உணவு உண்ணக்கூடாது என தெரிந்து கொண்டு ஓரிரு மாதங்களில் முழுவதுமாக சைவ உணவிற்கு மாறினேன். தவத்திரு புருசோத்தம பாகவதர் உயிரடக்கம் ஆனதும், அவரது மூத்த மகன் அருட்திரு எம்.பி. வரதன், கவிஞர் அருள்நம்பி, அருட்திரு. பா. தர்மலிங்கம் போன்றவர்கள் இணைந்து “வள்ளலார் திருவளர் சபை” என்ற அமைப்பை உருவாக்கினர். அதில் அடியேனை இணைச் செயலாளராக பணியாற்ற பணித்தனர்.
 
1990 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட சன்மார்க்க வாழ்வியல் மென்மேலும் வலுவடைந்து, வடலூரில் தலைமைச் சங்கம் துவங்கப்பட்ட போது தலைமைச் சங்கத்தின் - சென்னை மாவட்டக் கிளையின் செயலாளராக பணிசெய்யும் பொறுப்பேற்றேன். தொடர்ந்து கந்தகோட்டம் ஆலயத்தின் நூலகத்தில் பிரதி மாதம் நான்காம் ஞாயிறன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை மாதக் கூட்டத்தை நடத்தி வந்தோம். அந்தத் தருணத்தில் தான் முன்னர் குறிப்பிட்ட மாநாடும் நடைபெற்றது. 2002 ல் அடியேன் குடியிருப்பை மாற்றி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலுக்கு வந்ததால், சென்னை மாவட்ட அன்பர்களே அந்த சங்க நிகழ்வுகளை நடத்த ஏதுவாக அடியேன் எனது செயலாளர் பொறுப்பை விடுத்தேன். தற்போதும் கவிஞர் அருள்நம்பி தலைவராகவும், அருட்திரு அரிமா க. துரைராஜ் செயலாளராகவும், அருட்திரு எ. வை. சுந்தரம் பொருளாளராகவும் இருந்து மேற்படி சங்க நிகழ்வுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 
பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட சன்மார்க்க சங்கத்தில் அருட்திரு. வி.ஜி. ஜோதிமணி அவர்கள் தலைவராகவும், அடியேன் செயலாளராகவும், அருட்திரு. கண்ணன் பொருளாளராகவும், அருட்திரு. சு. ராஜேந்திரன் இணைச் செயலாளராகவும் இருந்து பணியாற்றிய தருணத்தில் தலைவர் திரு. வி.ஜி. ஜோதிமணி அவர்களின் நன்முயற்சியால் 2004 ஆம் ஆண்டு ஆவடியை கோவர்த்தனகிரி என்ற பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா பள்ளியில் மிகப்பெரிய தமிழகம் தழுவிய மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டிலும் அடியேன் பணியாற்றிடும் வாய்ப்பைப் பெற்றேன்.
 
பின்னர், மாநாடு முடிந்தவுடன், நாங்கள் கூட்டமைப்பாக வடலூர்-மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்கச் சோலை என்ற பகுதியில் “சன்மார்க்க சாதுக்கள் மையம்” என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்து, மேற்படி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பொறுப்பை விடுத்தேன். பின்பு 25.2.2008 தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற திருவறை தரிசன நாளன்று மேற்படி ‘‘சன்மார்க்க சாதுக்கள் மையம்’’ கட்டிடப்பணிகள் நிறைவடைந்து, தவத்திரு சென்னை உயிர் உறவு கூ. சங்கரைய்யா அவர்கள் தலைமையில், திருக்கண்டீஸ்வரம் இல்லற ஞானி சாதுசிவராமன் ஐயா அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டது. சிறப்பு மலரை தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் வெளியிட தஞ்சை பொ. சம்பந்தம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
 
எண்ணற்ற சன்மார்க்கச் சான்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
 
தற்போது தலைவர் திரு. நா. தர்மலிங்கம், செயலாளர் கி. சத்தியமூர்த்தி (அடியேன்), திரு. எ.வை. சுந்தரம் இணைசெயலாளர், கி. குப்புசாமி பொருளாளர், காப்பாளர்கள் அருட்திரு. A. மகேஸ்வரன், அருட்திரு. K.N. ராஜ்குமார், அருட்திரு. K.N. பார்த்தசாரதி, திரு. சுபம் பார்த்தசாரதி என்ற அமைப்பின் மூலம், பிரதி மாதம் பூசதினத்தன்று காலை 4 மணி அளவில் திருஅகவல் பாராயணமும், தொடர்ந்து பகல் உணவு அன்னதானமும் சிறப்பாகவும், வள்ளற்பெருமான் கூறிய எளிமையான முறையிலும் உணவு தயார் செய்து வழங்கி வருகிறோம்.
 
அடியேனின் இந்த அறிமுக உரையை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிட்டுள்ளோம்.
 
ஆசிரியர்
கி. சத்தியமூர்த்தி

 


 

 

அன்புடையீரே,
 
இவ்விதழ் வெளிவர நன்கொடை அளித்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் அடியேனின் உளமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.
 
இதுபோன்ற இதழ் தொடர்ந்து வெளியிட தயவுள்ளம் கொண்ட அன்பர்கள் நன்கொடை கொடுக்கலாம்.
 
அன்புடன்,
வள்ளலார் வருகை
கி. சத்தியமூர்த்தி
 

 சன்மார்க்கம் தழைத்தோங்க ஓர் அரிய வாய்ப்பு


வள்ளலார் சமுதாய நலம் மற்றும் கல்வி நிறுவனம் – சென்னை
Vallalar social welfare & Educational Organisation
செயல்பாட்டு விபரங்களுக்கு தொடர்புகொள்க செல் : 9382872726.
நிறுவனர் – தலைவர் : வள்ளலார் வருகை கி. சத்தியமூர்த்தி
துணைத்தலைவர் : எஸ். வீரன், சென்னை. சன்மார்க்க சங்கம் மந்தைவெளி.
செயலாளர் : கே. மனோகரன் சென்னை.
இணைச்செயலாளர் : திரு. செல்வராஜ், திருப்பூர். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் தருமச்சாலை.
பொருளாளர் : ந. சம்பத்
ஆலோசகர்கள் : திரு. செந்தில் மருதையப்பன் (USA)
                      திரு. சிவக்குமார் சிங்கப்பூர்.

வள்ளலார் சமுதாய நலம் மற்றும் கல்வி நிறுவனம்:
எதிர்கால செயல்பாட்டுத் திட்டங்கள்

1) ஆதரவற்ற சன்மார்க்க ஏழை எளியவரை அவரவர் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சன்மார்க்க சங்கங்களில் வைத்து பராமரிப்பது.
2) சன்மார்க்கத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பப்பாட கல்வி முதல் மேல் நிலை கல்வி வரை உதவி செய்தல். மற்றும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருதல்.
3) பொருளாதார வசதி இல்லாத சங்கங்களை புதுப்பித்து செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல் போன்றவை.
இவற்றை செய்ய நாம் முழுமூச்சுடன் செயல்பட்டால் சன்மார்க்கம் நிச்சயம் தழைக்கும்.
இதுவரை செய்து வரும் செயல் திட்டங்கள்:
வருடம் ஒரு முறை 70 ஆதரவற்ற சன்மார்க்க அமைப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் பாக்ஸ், பேனா, ஸ்கேல் போன்றவை கொடுத்து உதவுவது.
சுமார் 80 குழந்தைகளுக்கு திருவருட்பா போட்டிகளை நடத்தி, பரிசாக இலவச திருவருட்பா தொகுப்பு மற்றும் சான்றிதழ், நோட்டு, பென்சில் பாக்ஸ், பேனா, ரப்பர், ஸ்கேல் போன்றவற்றை கொடுத்து ஊக்கப்படுத்துதல். மேலும், சுமார் 200 குழந்தைகளுக்கு (போட்டியில் கலந்து கொண்டவர்கள்) மகாமந்திரம் பொறித்த பேனா, சான்றிதழ், இலவச திருஅருட்பா தொகுப்பு முதலியன கொடுத்து வருகிறோம்.

சமீப காலத்தில் செய்த சன்மார்க்க சமுதாயப் பணி:
மேட்டுக்குப்பம் தண்ணீர்ப்பந்தல், தெய்வீக மாமரத்தடி என்ற இடத்தில் சுமார் 60 வருட காலமாக கழிப்பறை, குளியலறை இல்லாது இருந்தது. அவ்விடத்தில் நமது முயற்சியால் சுமார் ரூ. 21, 600 /- பொருட்செலவில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்த இடம் வள்ளற்பெருமான் மேட்டுக்குப்பத்தில் இருந்த பொழுது தாகம் தணிந்து, இளைப்பாறிச் சென்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட பணிகள் மென்மேலும் சிறக்க நல்ல எண்ணம், தயவுள்ளம் கொண்ட அன்பர்கள் பொருளுதவி அனுப்ப விரும்பினால் – vallalar social welfare & educational organisation  என்ற பெயரில்  cheque, அல்லது DD ஆக அனுப்பவும்.


முகவரி : 
வள்ளலார் வருகை கி. சத்தியமூர்த்தி
12, வள்ளலார் தெரு, தென்றல் நகர்,
கிழக்கு திருமுல்லைவாயில், சென்னை – 600 062. 

 


 

Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
ஜோதிடம் – எண் கணிதம் – கைரேகை


அன்பு மிகுந்த ஆன்மநேய பெருமக்களே,

சுத்த சன்மார்க்கத்தின் பிரதான நோக்கமே மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதாகும். அதற்கு ஜோதிடம் எண் கணிதம், கைரேகை போன்ற சாஸ்திர முறைகள் தேவையா, இல்லையா என்பது பலரின் கேள்வி நிலையாக உள்ளது. இதில் ஒருசாரர் இதுபோன்ற சாஸ்திர வரைமுறைகள் வாழ்வியலுக்கு தேவையென கருதுகின்றனர். சிலர் சுத்த சன்மார்க்கத்திற்கு இவையெல்லாம தடை என்று கூறுகின்றனர். இந்த முரண்பாடான கருத்துகளிலிருந்து நாம் தெளிவடைய இந்த சாஸ்திரங்களைப் பற்றி சில அடிப்படை கருத்துகளை தெரிந்துக் கொண்டால் பின்னர் அவரவர் விரு Read more...
5 Comments
Vallalar Groups
Dear Vallalar Devotee,
Very Nice Article.. It will create "awareness" among public...
Endrum Anbudan..
Monday, December 29, 2008 at 22:50 pm by Vallalar Groups
valli ramanathan
Fantastic Sathyamorthy sir. Thanks for the article. valli.
Sunday, January 4, 2009 at 21:32 pm by valli ramanathan
Muthukumaaraswamy Balasubramanian
ஜாதகம் பார்த்து பத்து பொருத்தங்களும் உள்ளனவா என்று இரண்டு மூன்று ஜோதிடர்களை அணுகி சரி பார்த்துதான் பலர் திருமணம் செய்கிறார்கள்.ஆனால் எத்தனையோ திருமணங்கள் முறிந்து போகின்றன என்பது நாம் தினம் காணும் உண்மை. ஜோதிடம் என்பது வான சாஸ்திரம் என்பதை ஒப்புக்கொள்ளலாஆனால் சனியன் பிடிக்கிறது,அதற்குப் பரிகாரம் செய்யவேண்டும் என்பதும் ,குரு பார்வை வந்தால்தான் திருமணம் கைகூடும் என்பதும் உண்மை அல்ல. அதே போல் ஒருவர் பெயரோடு எண்கணிதப்படி ஒரு எழுத்தை சேர்த்துக்கொண்டால் அவரது வாழ்க்கையே மாறிவிடும் என்பது உண்மைக்குப் புறம்பானது.தாவு செய்து இதை எல்லாம் நம்பி ஏமாந்து பரிகாரங்கள் செய்து உழைத்து சம்பாதித்த காசை வீணாக்காதீர்கள். எனக்கு நான்கு பெண்கள் நான் யாருக்கும் ஜாதகம்பார்க்காமல்தான் திருமணம் செய்தேன். அனைவரும் சொந்த வீடு கட்டிக்கொண்டு குழந்தை களோடு நன்றாக வாழ்கிறார்கள். வாஸ்து எதுவும் நான் பார்த்து என் வீடு கட்டவில்லை. கலை உரைத்த கற்பனையே நிலை எனக்கொன்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் ,மண்மூடிப்போக. வள்ளலார்.
Monday, April 11, 2011 at 05:35 am by Muthukumaaraswamy Balasubramanian
venkatachalapathi baskar
மு.பா. ஐயா அவர்களே,

தாங்கள் மறுபடியும் வள்ளல் பெருமானின் கொள்கையை படித்தவர் மட்டுமில்ல, பின்பற்றுபவர் என்பதை காண்பித்து விட்டீர்கள்...நன்றி.
Saturday, February 6, 2021 at 13:21 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஜாதகம் பார்க்காமல் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்த அனுபவங்களை எழுதினால் பிறருக்கு உதவியாகவும் உத்வேகத்தை கொடுப்பதாகவும் இருக்கும்...
Thursday, February 11, 2021 at 09:36 am by venkatachalapathi baskar
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
வள்ளலார் சமுதாய நலம் மற்றும் கல்வி நிறுவனம் துவக்கி இதுவரை செய்து வரும் பணிகள்
முதன் முதலில் பழனி, கீரனூர் சன்மார்க்க குருக்குல குழந்தைகளுக்கு மகாமந்திரம் அச்சிட்ட எழுதுகோல் வழங்கினோம். அதன் பிறகு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 2010 மேட்டுக்குப்பம் தண்ணீர்பந்தல், தெய்வீக மாமரத்தடி என்று கூறப்படும் இடத்தில் இந்த இடம் மேட்டுக்குப்பம் பக்கத்தில் இருந்து வடலூர் செல்லும் வழியில் உள்ளது. இந்த இடத்தில் வள்ளல்பெருமான் அமர்ந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டதாலும், தாகம் தீர்க்க தண்ணீர் அருந்தி சென்ற இடமாகும். இந்த இடத்தை 60 ஆண்டுகளுக்கு முன் ஆலங்குடி சாமி என அழைக்கப்படும் சாது கோவிந்தசாமி அய் Read more...
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
தெய்வ பாவனை - தொடர்-2
பாடல் - 1

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு

நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்

Read more...
3 Comments
valli ramanathan
Thank you for giving explanation for Gana sariyai. ( Long time i am waiting for this.) Thank you.
Thursday, June 4, 2009 at 06:52 am by valli ramanathan
valli ramanathan
Please continue this article sir.
Wednesday, October 14, 2009 at 12:42 pm by valli ramanathan
valli ramanathan
Sathya moorthy Ayya,
Please continue the article.
Friday, April 23, 2010 at 19:09 pm by valli ramanathan
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
உலக மக்களுக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?
உலகியல் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள், வள்ளலார் அளித்த சன்மார்க்க நெறியை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு

விருப்பம் இருப்பின் அதைப் பின்பற்றி நலமடையுங்கள்

. ஏனெனில் நாங்களும் உங்களைப் போல் இறைவனைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ளாமல்,

பல உயிர்களை வதைத்து கொலை செய்து கிடைக்கும் அசைவ உணவை உண்ட காலம் உண்டு

. ஆனால் அது தவறென உணர்ந்து இன்று அந்த அருவெறுப்பான ஆன்ம நேயமற்ற உணவை விலக்கி சுத்த காய்கறி உணவை உண்பதால் உடல் நோய்களிலிருந்து மட்டும் விடுதலை பெற்றோம் என்று கூறுவதை வி Read more...
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் மற்றும் சன்மார்க்கச் சான்றோர்களும் சன்மார்க்கம் தழைக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும்?


சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் சமயங்களின் கொள்கையை நேரடியாக தாக்கிப் பேசுவதை தவிர்த்து, சன்மார்க்கத்தின் உண்மையான நிலையை மட்டும் எடுத்துக் கூறவேண்டும். அவர்களாக கேட்கும்பொழுது மட்டும் சமயங்களைப் பற்றி கூறவேண்டும். ஏனெனில் சமயங்களிலிருந்து தான் மக்கள் சன்மார்க்கத்திற்கு வர இயலும். வள்ளற்பெருமானும் தமது உரைநடைப் பகுதியில்,

சமயங்கள் சன்மார்க்கத்திற்கு அந்நியமல்ல, அநந்யம் என்று கூறி உள்ளதை நினைவில் கொள்வது அவசியம்.

ஒரு சில சன்மார்க்க அன்பர்கள் தாங்கள் ஏதோ மிகப்பெரிய அருள்சக்தியை பெற்றதாகக் கருதி, மக்கள Read more...
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்கப் பணிக்கும் ஜீவகாருண்யப் பணிக்கும் இடையூறு செய்பவர்கள் குறித்து தாங்கள் கூறும் கருத்து என்ன?
அன்பு வேண்டுகோள்:- சன்மார்க்க அன்பர்களுக்கு அவர்களது குடும்பத்தினராலும் உறவினர்களாலும் பலவித எதிர்ப்புகள் உள்ளது.

ஜீவகாருண்ய நெறியை தடுக்கும் எந்தவித உறவுகள் ஆனாலும் கடவுளால் தண்டிக்கப்படுவது நிச்சயம்

. எனவே ஜீவகாருண்ய நெறிக்கு எதிர்ப்பாக செயல்படாமல் இருப்பதே அவர்களுக்கு நலம் அளிக்கும். உறவினர்களின் தவறான அறிவுறுத்தலால் பல சன்மார்க்கக் குடும்பங்கள் ஒற்றுமை இல்லாது வாழ்வதை இன்றும் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல

அப்படி இடையூறு செய்தவர்கள் பலவித துன்பங்களுக்கு ஆளாகிவருவதையும் காணமுடிகிறது

. எனவே சன்மார் Read more...
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
உண்மையான ஜீவகாருண்ய செயல்பாடுகளைச் செய்ய எது சரியான வழி?
பொதுவாக சன்மார்க்க அன்பர்கள் ஆண்டு விழாவில் மட்டும் அன்னதானம் என்ற பெயரில் உணவளித்துவிட்டு இருந்துவிடுகின்றனர். மேலும், விளம்பர நோக்கத்தில் அதிக சுவையான உணவுகளைச் செய்து உணவளிக்கும் அன்பர்களையும், நன்கொடை கொடுத்து வருவதையும் தவிர்த்தல் நலம். (பயிர்களுக்கு இடையே புல் வளர்கிறது. அதை அகற்றினால் பயிர் பூண்டு செழித்து வளரும்)

சரி, உண்மையாக ஜீவகாருண்யம் செய்யும் அன்பர்களை எப்படி அடையாளம் காண்பது? இந்த எண்ணம் அடியேன் மனதிலும் ஒரு கால கட்டத்தில் எழுந்ததுண்டு, அதன்பிறகு அந்த தேடுதலைத் துவங்கினேன். அதன் பலன Read more...
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
ஜீவகாருண்யத்தைப் பற்றி வள்ளற்பெருமான் கூறுவதை சற்று விளக்கிக் கூறவும்?
அறிவார்ந்த ஜீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என வள்ளற்பெருமான் கூறியுள்ளார். கொலை புலை தவிர்த்து, சாதி சமய வழக்குகளில் சிக்காமல் வாழ்ந்து, நமது வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்து கொண்டு ஆதரவற்ற ஏழை எளியவர்க்கு, அவர்களின் பசி தீர்க்க உணவு அளிக்கவேண்டும்.

இதில் ஆடம்பரமோ, விளம்பர எண்ணமோ இல்லாது அவரவர் சக்திக்கு ஏற்ப இந்த ஜீவகாருண்யத்தை செய்யவேண்டும். இதுவே உண்மையான ஜீவகாருண்யமாகும்.

ஜீவகாருண்யத்தின் உண்மையான பலனாக வள்ளற்பெருமான் கூறுவது (1) ஊழ்வினைகளால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடலாம். Read more...
mail2jagadees
Its very nice concept about serving to poor peoples...
Serve to the poor people is direct wishing the GOD'S..
Aruperunjothi,thaniperun karunai!!!
By,
Jagadeeswaran D,
Thiruppachethi
Monday, April 5, 2010 at 05:24 am by mail2jagadees
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
வள்ளலார் தனது வருகை பற்றியும் சன்மார்க்கத்தில் வள்ளலார் வாழவேண்டிய வாழ்வியல் பற்றி கூறுவது என்ன?
இதை வள்ளற்பெருமான் சில பாடல்களில் கூறியுள்ளார்.

அகத்தே கறுத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத் தடைவிதித்து அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த உகத்தே வருவிக்கவுற்றேன் அருளைப் பெற்றேனே என்றும்

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன்வார்த்தை என்றுப் பாடலில் தெளிவுபடக் கூறுகிறார்.

எனவே அன்பு மிகுந்த சன்மார்க்க அன்பர்களே சன்மார்க்கத்தில் வந்த நாம் நமது சத்குரு கூறிய உயர்ந்த நெறியான சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை நன்கு கற்று தெளிவு பெற வ Read more...
Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
சன்மார்க்கம் வளர்ப்போம் சாகாவரம் பெறுவோம் இது எப்படி சாத்தியமாகும்?
வண்டமிழ்ப் புலமையில் உதித்த செஞ்சுடர் ஞானிகள் சான்றோர்கள் ஆயிரம் ஆயிரம் பேர். அவர்களில் உலகிற்கு உண்மைச் செய்தியை தந்த ஞானிகள் ஒரு சிலரே, திருமூலர், அகத்தியர், போகர், திருவள்ளுவர், ஒளவையார் போன்ற உயர் அறிவைப் பெற்ற ஞானிகளாகும், இவர்கள் தோன்றிய காலகட்டத்தில் மக்கள் அவ்வளவாக கல்வி அறிவும் விழிப்புணர்வும் இல்லாது இருந்ததால் இவர்களின் வாழ்வியல் உண்மை கருத்துக்களையும், இறைவனைப் பற்றிய உண்மை நிலையையும் மக்கள் அறியவில்லை.

இந்தச் சூழலில்தான் சமயங்கள் மக்களின் அறியாமை நிலையை பயன்படுத்தி உருவ வழிபாட்டுமுறைய Read more...