முதன் முதலில் பழனி, கீரனூர் சன்மார்க்க குருக்குல குழந்தைகளுக்கு மகாமந்திரம் அச்சிட்ட எழுதுகோல் வழங்கினோம். அதன் பிறகு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 2010 மேட்டுக்குப்பம் தண்ணீர்பந்தல், தெய்வீக மாமரத்தடி என்று கூறப்படும் இடத்தில் இந்த இடம் மேட்டுக்குப்பம் பக்கத்தில் இருந்து வடலூர் செல்லும் வழியில் உள்ளது. இந்த இடத்தில் வள்ளல்பெருமான் அமர்ந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டதாலும், தாகம் தீர்க்க தண்ணீர் அருந்தி சென்ற இடமாகும். இந்த இடத்தை 60 ஆண்டுகளுக்கு முன் ஆலங்குடி சாமி என அழைக்கப்படும் சாது கோவிந்தசாமி அய்யா அவர்கள் தன் பெயரில் வாங்கி இந்த பொது நிறுவனத்தை உருவாக்கினார். அதன்பிறகு கடந்த 1996-ம் ஆண்டு அவர் உயிரடக்கம் ஆகும்தருவாயில் அந்த நிர்வாகப் பொறுப்பை திரு.ஆர். ஜீவரத்தினம் அய்யா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார். சாலையில் இருந்து இந்தப்பகுதி சற்று உட்புறம் இருப்பதால் பெரும்பாலான சன்மார்க்க அன்பர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. நமது சன்மார்க்க சாதுக்கள் மையம் அந்தப்பகுதிக்கு முன் உள்ள திருவருள் சன்மார்க்க சோலையில் அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மாதப் பூசதினத்தன்று மதியம் நமது சாதுக்கள் மையம் சார்பில் தெய்வீக மாமரத்தடி தண்ணீர்ப்பந்தலில் ஜீவகாருண்யப் பணியை செய்துவருகிறோம். சுமார் 250 முதல் 300 வரை ஏழை எளியவர்கள் வந்து உணவு உண்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் அங்கு கழிவறை இல்லாது இருந்தது எங்கள் கவனத்திற்கு வந்தது. அதை கட்ட எண்ணம் கொண்டு ஒரு குளியலறை மற்றும் கழிவறை கட்டிக் கொடுத்தோம்.
இதன் மதிப்பு சுமார் ரூ. 22,600 (ரூபாய் இருபத்தி இரண்டாயிரத்து அறுநூறு மட்டும்) ஆனது. நன்கொடை விவரம் வருமாறு:
வ.எண்.
நன்கொடை அளித்த அன்பரின் பெயர் |
தொகை ரூ. |
செலவுகள் |
தொகை ரூ. |
|
1. |
திரு. வ.வ.கி. சத்தியமூர்த்தி |
2140 |
நிறுவனப்பதிவு செலவு |
1310 |
2. |
திரு. எஸ். சத்தியக்குமார் |
3000 |
லெட்டர் பேடு ரப்பர் ஸ்டாம்ப் |
320 |
3. |
திரு. கே.என்.பார்த்தசாரதி |
5001 |
அருள் அறக்கட்டளை நன்கொடை |
1000 |
4. |
பரேஷ்மா |
3000 |
குளியலறை, கழிவறை |
22600 |
5. |
பி.துவாஜ் |
2500 |
தண்ணீர்பந்தல் |
600 |
6, |
திரு. என். சம்பத் |
53001 |
கல்வி உதவித் தொகை கீரணூர் ச. குருகுலத்தில் எழுதுபொருள் |
2000 |
7. |
திரு. கே. மனோகர் |
790 |
ஸ்டிக்கர் |
1310 |
8. |
வி.மெலோ. அப்பேரல்ஸ் |
2505 |
பேனர் |
480 |
9. |
திரு. சதீஷ், திருப்பூர் |
3000 |
வங்கியில் செலுத்தியது |
1750 |
10. |
திரு. நடராஜ், திருப்பூர் |
2000 |
மருத்துவ முகாம் செலவு |
50000 |
11. |
திரு. எஸ். அசோக்குமார் |
5001 |
|
|
2.10.2011 அன்று காந்திஜெயந்தியை முன்னிட்டு செங்கல்பட்டிற்கு அடுத்துள்ள கருங்குழியில் கண்தானம், உடல்தானம் என்ற முறையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.