Vallalar Universal Mission Trust   ramnad......
பசிநீக்குதலை மாத்திரம் அடிக்கடி வலியுறுத்துவது என்னெனில்:-
பசிநீக்குதலை மாத்திரம் அடிக்கடி வலியுறுத்துவது என்னெனில்:-

    ஒரு சீவன் பசியினால் கொல்லப்படு மென்பதை யறிந்து காருணியத்தால் பசியை நீக்கி உயிர், பிழைக்கும்படி செய்பவர் வேறுவகையால் உயிர்க்கொலை நேரிட்டால் அதற்கிரங்கி அந்தக் கொலையால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்யாமலிரார்கள்.

   கொலையால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்யாதவர்கள் பசியால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விக்கத்தக்க தயவுடையவர்க ளாகார்கள். பசியால் வருங் கொலையை ஆகாரத்தாலன்றி வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது;

    பகை முதலியவற்றால் வருங்கொலையை அநேக உபாயத்தால் நிவர்த்தி செய்விக்கக் கூடுமாதலால், கொலையால் வருந்துன்பத்தைப் பசியால் வருந்துன்பத்திலமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்றதென்றறிய வேண்டும்.