Vallalar Universal Mission Trust   ramnad......
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி

மயில்குயில் ஆச்சுத டி.


 துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்

வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி

வள்ளலைக் கண்டேன டி.
 
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேன டி - அக்கச்சி

சோதியைக் கண்டேன டி.
 
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்

ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி

ஐயரைக் கண்டேன டி.