Vallalar Universal Mission Trust   ramnad......
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
சகவடிவில் தானாகி நானாகி நானும்
தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.