Vallalar Universal Mission Trust   ramnad......
முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.