Vallalar Universal Mission Trust   ramnad......
நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.
ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
எட்டியே எனமிகத் தழைத்தேன்
பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.

ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.