Vallalar Universal Mission Trust   ramnad......
காற்றாலே புவியாலே ககனமதனாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே
காற்றாலே புவியாலே ககனமதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளிந்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகில்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

மேலே கண்ட பாடலின்படி எந்த சக்தியாலும் தன் உடம்பை அழிக்கமுடியாத அருள் தேகத்தைப் பெற்றவர் வள்ளலார்.

அருட்பெரும்ஜொதி ஆண்டவரின்
தனிப்பெரும்கருணையால்.மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வள்ளலார் வாழ்ந்து கொண்டு உள்ளார்