Vallalar Universal Mission Trust   ramnad......
நடராஜர் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு
நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே
நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே
நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே
நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே
நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே
நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வதுதிரு அம்பல மே
நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு
நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே
நடப்பிர காசம் தவப்பிர காசம்
நவப்பிர காசம் சிவப்பிர காசம்
நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே
நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே
நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.