Vallalar Universal Mission Trust   ramnad......
பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே பொங்கிவழிந் துடைகின்றேன்
பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.