Vallalar Universal Mission Trust   ramnad......
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராஜபதியே........
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
எல்லாஞ்செய் வல்லதாகி
இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
இயற்கையே இன்பமாகி
அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
அருளாகி அருள்வெளியிலே
அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
அருட்பெருஞ் சோதியாகிக்
கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
காட்சியே கருணைநிறைவே
கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
கதியே கனிந்தகனியே
வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
வீற்றிருந் தருளும்அரசே
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
மேவுநட ராஜபதியே.