Vallalar Universal Mission Trust   ramnad......
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ துணர்ந்திடுக
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.