Vallalar Universal Mission Trust   ramnad......
ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
இடம்புரிக வாழ்க இசைந்து

ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
பத்திஎலாம் பெற்ற பலன்

ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்

ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி