Vallalar Universal Mission Trust   ramnad......
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர் செறிஇருள் அடைந்தனர்....
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறிஅருளைக் கொண்டு.