Vallalar Universal Mission Trust   ramnad......
முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே...........வள்ளலார்
சுகம் அறியீர்
துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர்
உலகீர்
சூது அறிந்தீர்
வாது அறிந்தீர்
தூய்மை அறிந்திலிரே
இகம் அறியீர்
பரம் அறியீர்
என்னே நும் கருத்து
ஈது என் புரிவீர்
மரணம் வரில் எங்கு உறுவீர்
அந்தோ
அகம் அறியீர்
அனகம் அறிந்து 
அழியாது ஞான அமுத வடிவம் பெறலாம்
ஈண்டு அடைந்திடுமின்
முகம் அறியார் போல் இருந்தீர்
என்னை அறியீரோ


முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே...........வள்ளலார்