Vallalar Universal Mission Trust   ramnad......
என்னால் ஆவதொன் றும் உனக் கில்லையெ னினுமெந் தாய் உன்னால் வாழுகின் றேன் எனக் குண்மை உரைத்தரு ளே.
கண்ணே கண்மணி யே  கருத் தேகருத் தின்கனி வே
விண்ணே விண்ணிறை வே சிவ  மேதனி மெய்ப்பொரு ளே
தண்ணேர் ஒண்மதி யே  எனைத்  தந்த தயாநிதி யே
உண்ணேர் உள்ளொளி யே எனக்  குண்மை உரைத்தரு ளே.
நந்நா லுங்கடந் தே ஒளிர்  ஞானச பாபதி யே
பொன்னா ருஞ்சபை யாய்அருட் பூரண புண்ணிய னே
என்னால் ஆவதொன் றும் உனக்  கில்லையெ னினுமெந் தாய்
உன்னால் வாழுகின் றேன் எனக்  குண்மை உரைத்தரு ளே.