Vallalar Universal Mission Trust   ramnad......
உலக நாதவள்ளல் மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே.
உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
உரைத்தவாய் மைகளைநாடி
ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
ஒதிபோல நிற்பதுமலால்
கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
கலங்கொள்ள வேண்டும்என்பர்
இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
இவர்க்கேது தெரியும்என்பர்
இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
இட்டகட் டென்பர்அந்த
வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.